Friday, April 22, 2016

“பூமிகா சொல்கிறாள் பூமியை காப்பாற்றுங்கள்!”



பூமிகா :-[தன் அம்மாவிற்கு குரல் கொடுத்து கொண்டே வீட்டிற்குள் நுழைகிறாள்]
அம்மா,அம்மா,அம்மாஆஆஆ…. அட அம்மா எங்கே போய்ட்டாங்க ,இதப்பாரு குழாயை திறந்து விட்டு எங்கே போனாங்க எவ்வளவு தண்ணி வீணா போகுது.

[பூமிகா தனக்கு தானே பேசிகொண்டு குழாயை நிறுத்துகிறாள்,இங்க பாரு  ஃபேன் ஓடுகிறது,டீவி யிலும் இத்தனை சத்தம் வைத்துவிட்டு எங்கே போனாங்க இந்த அம்மா….?

சரி அம்மா வரும்வரை கொஞ்சம் ஸ்கூல் வேலை செய்யலாம் ,என்ன இது எதோ தீய்கிற வாசனை வருது என சொல்லி கொண்டே கிச்சன் பக்கம் செல்கிறாள், அட கடவுளே இந்த அம்மாவை என்ன செய்ய? அடுப்பில் பாலை வைத்து இன்றும் தீய வைத்து விட்டாங்களே, தினம் தினம் அம்மாவுக்கு இதே வேலையா போச்சு சிறிய முக சுளிப்புடன் மீண்டும் சத்தமாக குரல் கொடுக்கிறாள் அம்மா அம்மா அம்மாஆஆ

பொன்னி:- பூமிகாவின் அம்மா வீட்டினுள் வந்துகொண்டே பூமிகா, ஏண்டீ இப்படி கத்தற  வரேன் வரேன், என்ன ஆச்சு எப்போ ஸ்கூல்ல இருந்து வந்த ?

பூமிகா:-அம்மா நீங்க எங்கே போனீங்க?

பொன்னி:-பூமி, கமலா ஆன்ட்டி வீட்டுக்கு போய் இருந்தேண்டி பேசி கொண்டு இருந்ததில் கொஞ்சம் நேரம் ஆகிவிட்டது

பூமிகா:-அம்மா இது கொஞ்சம் நேரமா??  நான் ஸ்கூல்ல  இருந்து வந்து அரைமணி நேரத்திற்கு மேல் ஆகிறது,உங்களுக்கு நான் எத்தனை முறை சொல்லுவது எங்கே வேணா போய் வாங்க ஆனால் வேளியே போகும் போது தண்ணி குழாய்,டீவி,ஃபேன் எல்லாம் செக் செய்துட்டு போங்க தண்ணி,கரண்ட்,கேஸ் என எவ்வளவு வீண் செய்யாறீங்க தெரியுமா

பொன்னி:-என்னடி செய்றது மறந்து மறந்து போறேன் இனி நினைவு வைத்து கொள்கிறேன் சரியா.. அப்படியே கூட இப்படி சின்ன சின்ன விஷயத்தில என்ன ஆகபோறது, சில நேரம் மறதியால் அப்படியே வெளியே போய்டறேன், விடுவியா?

பூமிக்கா:- [சிறிய கோபத்துடன் சொல்கிறாள்] சின்ன சின்ன விஷயத்தில் என்ன ஆகபோறதா? அம்மாஇப்படி சின்ன சின்ன விஷயம் தான் உலகளவில் பாதிப்பு ஏற்படுத்தி கொண்டு இருக்கு அதனால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள முடியாமல் நிற்கிறோம் அம்மா நீங்கதான் சொல்லி கொடுத்திங்கசிறு துளி பெரு வெள்ளம்”  என்று சிறு துளி, சிறு துளி என கவனம் இல்லாமல் இருப்பது சரியா?

பொன்னி:-[சிரித்து கொண்டே] பூமி அது எங்க அம்மா சொன்னாங்க நான் உனக்கு சொன்னேன், சரி அதை விடு எனக்கும் சொல்லேன் என்ன பாதிப்பை உலகம் எதிர்கொள்கிறது? ஏதாவது நடக்க போறதா?
 
பூமிகா:- ஆமாம் அம்மா அதுக்கு பேரு “Global Warming “ ன்னு சொல்லுவாங்க

பொன்னி :- பூமி, அந்த “Global Warming “ பற்றி கொஞ்சம் சொல்லேன், கரண்ட் கூட இல்ல, டீவி பார்க்க முடியாது

பூமிகா:-அம்மா “Global Warming “ என்றால் நமது பூமியின் தட்பவெட்பம் அதிகம் ஆனதை/ஆவதை  குறிப்பது அதனால் இயற்கை வாழ் சூழ் நிலையில் மாற்றம், மழையின் அளவு மிகவும் குறைந்து விட்டது, மழை இல்லாததால் பூமியின் வெட்பம் மிக அதிகமாகிவிட்டது இந்த மற்றங்களால் உலகம் வித ,விதமான  பாதிப்புகளை எதிர்கொள்கிறது

பொன்னி :- ம்ம்,அப்படியா?

பூமிகா:-ஆமாம்மா நாம் மனிதர்களும் பல விதங்களில் தன் விருப்பங்களுக்கு மட்டுமே முதலிடம் கொடுத்து,தன் விருப்ப வாழ்க்கைக்காக மரங்களை வெட்டி இயற்கைக்கு சேதம் விளைவிக்கின்றனர்
இப்படியே நாம் மரங்களை வெட்டி கொண்டே இருந்தோம் என்றால் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் நாம் அனைவரும் பழங்கால வாழ்க்கைதான் வாழ வேண்டி வரும்,பழங்கால மனிதர்களுக்காவது காய்கள்,பழங்கள், கிழங்குகளை இயற்கை கொடுத்தது ஆனால் நமக்கு பழகால மனிதர்களை விட மிக மிக பாதிக்கும் நிலை தான் ஏற்படும், இயற்கையே இயலாமை ஆக மாறி விடும்,இயற்கையிடம் இருந்து ஏதும் கிடைக்காது

பொன்னி:-ஏன் பூமி? ஏன் ஏதும் கிடைக்காது

பூமிகா:-அம்மா மரம், செடியே இல்லாத போது பழம்,காய்,கிழங்கு எங்கே கிடைக்கும்? இப்போ சொல்லுங்க நம் கடமை இல்லையா  இந்த உலகை காக்க,இந்த பாதிப்பை குறைக்க ,மிக சிறிய அளவில் ஆவது நம்மால் ஆனதை முயற்சிக்கலாம் இல்லையா?

பொன்னி:-ஏன் முயற்சிக்க கூடாது பூமி, கண்டிப்பாக முயற்சிப்போம் ,இந்த உலகை காக்க..
இந்த “Global Warming” பற்றி என் ஃப்ர்ண்ட்ஸ் கிட்டே சொல்லுவேன் எவ்வளவு முடியுமோ கண்டிப்பாக நாங்கள் இந்த பாதிப்பை குறைக்க தொடர்ந்து முயற்சிப்போம் [சிறிய புன்னகையுடன்] சாரி பூமி, என்ன செய்ய வேலை அலைச்சலில் மறந்து விடுகிறேன் இப்படி சிறிய தவறுகள் நடந்து விடுகிறது.

பூமிகா:-அம்மா ,மொபைல் இல் ரிமைண்ட் வைங்க,சுவிட்ச் போர்ட் இல் எழுதி வைங்க, தினம் இப்படி பழகினால் மறதி போய் இவை வழக்கமாகிடும்.
துணி துவைக்கும் போதும், பாத்திரங்கள் சுத்தம் செய்யும் போதும் குழாய் நீரின் வேகத்தை குறைத்து பயன்படுத்துங்கள் ,மேலும் பல முறை நான் பார்த்து இருக்கேன் கிச்சன் கார்டன் க்கும் குழாய் நீரை திறந்து விட்டு அது பாத்தி நிறைந்து நதியாக ஓடும் ஏன் இப்படி செய்றீங்க  ஒரு 10,15 நிமிடம் நின்று மழை போல நீரை தெளியுங்கள் வேர் நனையும் வரை அது போதுமே செடிகளுக்கு,
ட்ரைனிங்க்  பைப் [வடிகால் குழாய் ] இல்லாத வீடுகளில்  கிச்சன் கார்டன் க்கு பாத்திரம் கழுவிய நீர், துணி துவைத்த நீரை பயன்படுத்தலாம்
கிச்சன் கார்டன் இல்லாத பூத்தொட்டி மட்டும் வைத்திருக்கும் உங்க ஃபிரண்ட்ஸ் க்கு சொல்லுங்க , காய் கறி, அரிசி அலம்பிய நீரை பயன்படுத்த சொல்லி முடிந்தவரை ஓசோன் வாயு வெளி இடும் துளசி செடிகளை அதிகம் வளர்க்கலாம்

அதே போல சமைக்கும் போது குறைவான தீயில் சமைக்கவும், மூடி வைத்து சமைக்கவும் [மூடி வைத்து சமைப்பதால் நீராவியின் வெட்பமும் உதவும் காய்கறி வேக] இதனால் உணவும் தீயாது ,சமையலும் சுவையாக இருக்கும் கேஸ்  உம் குறைந்த அளவு பயன் ஆகும். மேலும் பல முறை உங்களுக்கு சொல்லி இருக்கேன் மிக அருகில் உள்ள இடங்களுக்கு ஸ்கூட்டி ஐ பயன்படுத்தாதீங்க என்று, நடந்து செல்லலாம் அல்லது சைக்கிளில் செல்லலாம் இதனால் பெட்ரோல் குறைவாக பயன் ஆகும், செலவும் மிச்சம், உங்க உடல் நலமும் சுகம் சரிதானே நான் சொல்லுவது?

பொன்னி :- பூமி இத்தனை விஷயங்கள் இருக்கா? இனி நீ சொன்ன அனைத்தையும் செய்ய முயற்சிக்கிறேன் “சிறு துளி பெரு வெள்ளம்” என்பது இப்போது நன்றாக புரிகிறது வெறும் பழமொழியாக மட்டுமே படிக்காமல் ,பயன்பெறும் விதமாக சொல்கிறாய்

பூமிகா:-அம்மா உங்களுக்கு தெரியுமா?  ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படும் “Earth Hour” [பூமி நேரம் ]என்பது. உலகம் முழுதும் பல நாடுகளில் மின்சாரத்தை ஒரு மணி நேரம் நிறுத்தி வைப்பது/வைப்பார்கள்  இந்த “Earth Hour” 2007 ஆம் வருடம் துவங்கியது இதனால் மின்சாரமும் சேமிப்பு, Global Warming உம் கொஞ்சம் குறையும் ..

பொன்னி :- ஆமாம் பூமி, இதை எல்லாம் செய்வதால் நமக்கு நாமே உதவி கொள்கிறோம்,என்பது உண்மை நாம் பயன்பெறலாம் என்ற இந்த எண்ணம் வந்தாலே போதும் இவை அனைத்தையும் நாம் பின் பற்றுவோம்.

பூமிகா & பொன்னி:- சிறு துளி பெருவெள்ளம் பழமொழியாக அல்லாமல் பயன்பெரும் வழியாக பின்பற்றுவோம் மரங்கள் வளர்ப்போம், இயற்கை உடன் கை கோர்ப்போம் ,பூமியை காப்போம்

Save Environment! Save Whole
Our World!
KRSHI!