Monday, September 7, 2009

"சிந்திக்க ,சிரிக்க, கொஞ்சம் சினம் கொள்ள [பழமொழியை கிண்டல் செய்ததற்காக!] "


துஷ்டர்களை கண்டால் தூர விலகு !
ஏன்? அவர்களின் கஷ்டங்களை களை எடுக்கலாமே !

பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் !
நெருப்பு சமானமில்லை எனில் சோறு
"நறுக்" அரிசியாகுமே !

கண்ணால் காண்பதும் பொய்,
காதால் கேட்பதும் பொய்,
தீர விசாரிப்பதே மெய் !
விசாரிப்பும் ,விளக்கமுமே பொய்யானால்?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் !
முகச்சாயம் போட்டவரின் அகத்தின் அழகு ?

அமாவாசை சோறு என்றைக்கும் அகப்படுமா ?
[அகப்படும் தினமும் விரதமிருந்து அன்னம் உண்டால்]
நிலா சோறு மட்டும் தினமும் கிடைக்குமா?

காற்றுள்ள போதே தூற்றி கொள் !
ஏன்? மின்விசிறி பயன்படுத்தலாமே !

அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்!
அழவேண்டாம் அறுவை சிகிச்சை இருக்கும் வரை !

ஆழமறியாமல் காலை விடாதே !ம்ம்
ஆழ்கடலில் நீந்த பழகிக்கொள்ளலாமே !

ஆனைக்கும் அடிசறுக்கும் !
சகதியில் அழைத்து செல்லவேண்டமே!

கழுதை அறியுமா கற்பூர வாசனை ?
மணம் அறிந்து சொல்ல கழுதைக்கு மொழி தெரியாதே !

பட்ட காலிலே படும் !
கட்டு கட்டி செல்லலாமே !

KRSHI!