
“அன்பே சிவம்”
விரும்பாதே! என யாராலும் யாரையும் சொல்ல முடியாது இது ஒரு அடங்காத இயற்கை! ஒருவரை ரசிக்காதே! என கூறலாம் கண்களை கட்டி கொண்டால்,காதுகளை பொத்திக் கொண்டால் இதை செய்ய [தடுக்க] முடியும்!
விலகாதே! எனவும் கூறலாம் இதை அன்பினால் ,ஆசையினால்
வேண்டி கேட்க முடியும்! மயங்காதே ! என தடை செய்யலாம் இது [மயக்கம்] பல வகை அதனால் கண்டிப்பாக அடக்க முடியும்! கலங்காதே! என அரவணைத்து கூறலாம் இதை அன்பால், காதலால் ,ஆறுதலால் கட்டுப் படுத்த முடியும் ]
வேண்டி கேட்க முடியும்! மயங்காதே ! என தடை செய்யலாம் இது [மயக்கம்] பல வகை அதனால் கண்டிப்பாக அடக்க முடியும்! கலங்காதே! என அரவணைத்து கூறலாம் இதை அன்பால், காதலால் ,ஆறுதலால் கட்டுப் படுத்த முடியும் ]
இப்படி பல உணர்வுகள் மாநிதான் குணத்தில்,வாழ்வில் உள்ளது..இதில் " விரும்பாதே!" ,"விரும்பு!" என்பது யார் கட்டுப்பாட்டிலும் வராத ஒரு இயற்கை உணர்வு, இந்த விஷயத்தில் மட்டும் ஆயிரம் பொன் ,பொருள் கொடுத்தாலும் அல்லது ஒன்றுமே கொடுக்கவில்லை என்றாலும்,ஏதும் இல்லை என்றாலும் இந்த விஷயத்தில் மனிதனின் மனம் தன் இஷ்டம் போல தான் நடக்கும்....
உலகில் மனிதனின் கட்டுக்குள் வராதது ஒன்றே ஒன்று இதுதான் அவன் "மனம் அல்லது, உள்ளம் அல்லது, இதயம்" சரி, விரும்பாதே!,விரும்பு! என உங்கள் மனதை கெஞ்சி,கொஞ்சி அதட்டி முயற்சித்து பாருங்களேன் பார்க்கலாம்!
விரும்பாதே, விரும்பு !என யாரையும் யாரும் சொல்ல முடியாது ஏன்? அவன் தன்னையே கூட சொல்ல முடியாது .... ஏன் என்றால் அதுதான்,
அன்பே சிவம்! அன்பே சிவம்!
KRSHI!