மாதா, பிதா, குரு தெய்வம் !
நம் முன்னோர்கள் மாதா,பிதா குரு,தெய்வம்!என்று கூறியது அனைவரும் அறிந்ததே!கடவுளை கூட குருவுக்கு பிறகுதான் குறிப்பிடுகிறார்கள் அப்படி இருக்க சில தவறான புரிந்துகொள்ளுதலால் ஆசிரியர்களை தான் அனைத்து தவறுக்கும் காரணம் என நினைப்பது கொஞ்சம் யோசிக்க வேண்டியதாக உள்ளது.
தற்சமய சட்ட திட்டபடி பள்ளியில் படிக்கும் மாணவர்களை தவறு செய்தால் கூட ஆசிரியர்கள் தண்டிக்க கூடாது என்கிற ஆணை பிரபிக்கப்பட்டுள்ளது இது யாவரும் அறிந்ததே, இதில் எதிர்மறை,நேர்மறை மாற்றங்கள் ஏற்படலாம்,பலனும் பல,பாதிப்புகளும் பல,
இந்த சட்டத்தின் காரணமாக மாணவர்கள் ஆசிரியர்கள் பயம் இல்லாமல் படிக்கும் நிலை வரவேற்க்ககூடியது மேலும் படிப்பில் பின் தங்கிய சில மாணவர்கள் சில ஆசிரியர்களின் பயம் தெளிந்து தன் வாதங்களை தையிரியமாக கேட்க முயல்வார்கள்.
இப்போதும் பல பள்ளிகளில் சில ஆசிரியர்கள் அதிகம் கண்டிப்பு இல்லாமலே அவர்களின் தேர்வு முடிவுகள் முழு சதவீதம் உள்ளது காரணம் அவர்கள் பாடம் நடத்தும் முறை தெளிவாக இருப்பதுதான். தோழமையுடன் பழகும் முறை,சில ,பல உதாரணங்களை அழகாக விளக்கும் முறை,இப்படி உள்ள வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களிடம் மரியாதை கலந்த நட்புடன் பாடவிளக்கங்களை கேட்க்கிறார்கள் படிக்கிறார்கள்
அதே நேரம் சில ஆசிரியர்கள் தன் வகுப்பு மாணவர்கள் சரியாக பாடங்களை கவனிக்கவில்லை என்றாலும்,படிக்கவில்லையென்றலும் அதிகம் கவனம் செலுத்தப்போவதில்லை, அப்படியே ஆசிரியர்கள் பெற்றொர்களை சந்திக்கும்படி தகவல் அனுப்பினாலும் சில மாணவர்கள் பயத்தின் காரணமாக தன் பெற்றொர்களிடம் சரிவர தெரிவிப்பதில்லை இதில் பொய் சொல்லும் பழக்கம் வளர வாய்ப்புகள் அதிகம், ஆசிரியர்களும் அடுத்து எந்த முயற்சியும் எடுப்பதில்லை பெற்றொர்களை சந்திக்கும் வரை! இதில் மறைமுக பதிப்பு மாணவர்களுக்கே !
ஆசிரியர்களை காரணம் சொல்லி மிரட்டி படிக்கவைக்கும் நிலை போய் தற்சமயம் மாணவர்கள் பெற்றொர்களை காரணம் சொல்லி ஆசிரியர்களை மிரட்டும் நிலை ,இதிலும் பாதிப்பு மாணவர்களுக்கே!
மாணவர்களுக்கு கொடுக்கும் தண்டனை என்பது பிள்ளைகளுக்கு பயன் உள்ளதாகவும்,அதே நேரம் மீண்டும் அந்த தவறை செய்ய கூடாது என்கிற மன நிலையும் அந்த மாணவர்களுக்கு வர வேண்டும் சில காரணங்களால் ஓர், இரு நாட்கள் பள்ளிக்கு வரமுடியாமல் போகும் மாணவர்கள், அல்லது படிப்பில் கவனக்குறைவாக உள்ள மாணவர்கள், வீட்டு பாடங்களை சரிவர செய்யாமல் வரும் மாணவர்களுக்கு அதே வீட்டு பாடங்களை இரு முறை அல்லது மூன்று முறை எழுதசொல்ல வேண்டும் அப்படியும் சில மாணவர்கள் வீட்டு பாடங்களை சரிவர செய்வதில்லை. இவர்களுக்கு அந்த வகுப்பு ஆசிரியர்கள் பள்ளி நேரம் முடிந்ததும் [மாலையில்] ஒரு அரைமணி நேரம் அதிகமாக அந்த பிள்ளைகளுக்கு தன் அருகில் வைத்து அந்த பாடங்களை எழுத சொல்லலாம் பல முறை எழுத சொல்வதால் அவர்களுக்கு அந்த பாடப்பகுதி மனதில் நன்றாகப்பதியும், அவர்கள் கை எழுத்தும் சீராகும் மேலும் மாலை நேரம் என்பது அவர்கள் விளையாட்டு நேரம் என்பதால் நம் விளையாட்டு நேரம் வீணாகிவிட்டதே என்கிற காரணத்தால் கண்டிப்பாக அவர்கள் மீண்டும் தவறு செய்ய யோசிப்பார்கள்.
வகுப்பில் பாடம் நடத்தும் போது கவனிக்காத பிள்ளைகளை அடுத்த நாள் வகுப்பில் இந்த பாடங்களை அவர்களே படிக்க வேண்டும் என்று கூறலாம் [கண்டிப்புடன் படிக்க சொல்லவேண்டும்] அல்லது தொலைகாட்சியில் செய்திகள் சேகரித்து வர சொல்லி வேலை கொடுக்கலாம் இதன் காரணமாக அவர்கள் பொது அறிவும் பெறுவார்கள், “என்னடா இது நம் அம்மாவே தொலைகாட்சி ஒரு மணி நேரம் தான் பார்க்க அனுமதிகிறார்கள் இதில் செய்தி வேறு சேகரிக்க வேண்டுமே” என்கிற நிலையில் கொஞ்சம் வகுப்பில் பாடங்களை கவனிக்கலாம் இதெல்லாம் நடக்குமா என கேட்காதீர்கள், முயற்சி செய்வதில் தவறு இல்லையே!
படிப்பில் கவனக்குறைவாக உள்ள சில மாணவர்களை சார்ட்டில் [Chart] அட்டவணை செய்ய சொல்லலாம், முக்கியமான பாடபகுதிகளை விளக்கமாக வரைந்து வர சொல்லலாம் இதனால் அந்த பிள்ளைகள் அறிவும் பெறுவார்கள்,வகுப்பில் தாழ்வுமனப்பான்மை என்கிற எண்ணமும் ஏற்படுவதில்லை.ஒரு ஆசிரியர்க்கு தன் வகுப்பில் 70% மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களை 90% அல்லது 100% மதிப்பெண்கள் வாங்க வைப்பது என்பது மகிழ்ச்சிக்குறியது ஆனால் அதே வகுப்பில் உள்ள 30% அல்லது 40% மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களை 70% அல்லது 80% மதிப் பெண்கள் வாங்க வைப்பதில்தான் வெற்றியின் மகிழ்ச்சி.
இன்றைய வாழ்க்கை முறையில் [நேரமின்மை,இயந்திர வாழ்க்கை முறை] கணவன் ,மனைவி இருவரும் உத்தியோகம் செய்பவர்கள் இதில் அவர்கள் தன் பிள்ளைகளை சரிவர கவனிக்க இயலாத நிலை அதனால் டிவிஷன் என்கிற குட்டி பள்ளிக்கு அனுப்ப நிர்பந்திக்க படுகிறார்கள். டிவிஷனிலும் மாணவர்களுக்கு அடி,உதை என தண்டணை கிடைகிறது.சில கண்டிப்பு மிக்க பெற்றொர்களும் காரணம் அவர்கள் பிள்ளைகள் தவறான முடிவு எடுப்பதற்க்கு! ஆசிரியர்களை மட்டுமே காரணம் என சொல்வது தவறான கண்ணொட்டம்,
மேலும் சில ஆசிரியர்கள் தன் சொந்த பிரச்சனைகள் ,வேலைகள் அனைத்தையும் பள்ளிக்கு கொண்டு வந்து அதே மன நிலையுடன் பாடம் நடத்தும் போது தன் கோபங்களை மாணவர்களிடம் காண்பிக்கிறார்கள், இயற்கையிலேயே தன்னை விட பலம் குறைந்தவரிடம் வேகம் கட்டுவது மனிதனின் இயல்பு, இப்படியும் சில மாணவர்கள் பாதிக்க படுகிறார்கள்,எப்படி இருந்தாலும் இனி மாணவர்கள் ஆசிரியர்கள் பயம் இல்லாமல் சுதந்திரமாக படிப்பது வரவேற்க்க கூடியது…
கற்க கசடர கற்பவை கட்ற பின்,
நிற்க அதற்க்கு தக!
நம்புவோமே! நம்பிக்கை வைப்போமே!
KRSHI!
Tuesday, July 27, 2010
Subscribe to:
Posts (Atom)