
விழியில் வழியும் விழிநீர் பெண்பாவம்!
[தெளிவானது,தெரிவது ]
விழியோரம் விழாமல் நிற்கும் விழிநீர் ஆண்பாவம்!
[வேதனை,தெரிந்தும் மறைக்கபடுவது]
பெண்கள் செய்யும் தவறுகளை அதாவது ஒரு ஆண்மகனை அடிப்பது, ஏசுவது என்பதை ஒரு வேடிக்கை அல்லது கேளிக்கயாகவே ஏன் சித்தரிக்கிறார்கள்! அப்படியும் மீறி ஒரு ஆண்மகன் தன் கவலைகளை தன் நண்பனிடம் கூறினால் சமுதாயம் சொல்கிறது "பெண்டாட்டியை அடக்க தெரியாதவன் இவன் எல்லாம் ஆண்மகனா?" உடனே அவன் ஈகோ தலையெடுக்கும் அப்புறம் என்ன?வீட்டிலே ச ரி க ம ப த நி ச தான்.. சமீபத்தில் ஒரு நண்பர் கூறியது ஒரு வீட்டில் மனைவி கணவனை தினமும் கொடுமை படுத்தி இருக்காங்க அனால் மாறாக கணவன் மேல் குற்றம்சொல்லி இருக்காங்க "என் கணவனின் கொடுமை தாங்க முடியல எனக்கு விவாகரத்து கொடுக்க வேண்டும்" என!இப்போதான் சட்டம் வந்து விட்டதே! பெண்கள், தங்களை தன் கணவன் கொடுமை படுத்துவதாக கூறினால் அப்பீல் ஏதும் இல்லை உடனே ஆண்மகனை தூக்கி ஜெயிலில் போட்டு சாத்து! அவரின் கணவன் வீட்டிலே கேமரா வைத்து தினம் நடப்பதை படமாக எடுத்து போலீஸ் இடம் ஒப்படைத்து இருக்கிறார்! தற்கால நிலைமை இப்படி உள்ளது. கணவன் என்கிற ஆண்மகன் எதுவரை பொறுத்து போவார் [பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது மறந்துட்டார் போல
பெண்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகளை சிலர் இப்படி பயன்படுத்துகிறார்கள், பெண்களின் ஆயுதம் முன்பு எல்லாம் கண்ணீராக இருந்தது. இப்போ இப்படி அநீதி என்கிற போர்வையை கணவனுக்கு போர்த்தி கருணை என்கிற பெயருக்கு களங்கம் செய்கிறார்கள் சில பெண்கள்...சிலர் ஆறுதல் என்கிற பெயரில் பலரின் வாழ்க்கையிலும் விளையாடுகிறார்கள்..
இக்கால சில இளம் பெண்கள் ஒருபடி மேலே, பஞ்சாப் கேசரி என்கிற நியூஸ் பேப்பர் இல் சில இளம் பெண்கள் சொல்லி இருக்காங்க "எங்களுக்கு above 40 or 45 வயது ஆண்களிடம்தான் அதிக விருப்பம்" அதற்க்கு அவர்கள் சொல்லும் காரணம் "இளம் ஆண்களுக்கு வேலை தேடும் Struggle , செலவு செய்வதில் யோசனை, உண்மையான அன்பு இல்லாமை, பல நண்பிகளிடம் பழக்கம், சுய சொத்து இல்லாமை இன்னும் பல.. இதை படித்து Shock ஒருபுறம், வேதனையான புன்னகை ஒருபுறம், இதுவும் ஒரு பெரிய காரணமா இருக்கு பல வீடுகளில் கணவன் மனைவியின் பிரிவு!
இதை படித்து பெண்ணே பெண்களின் எதிரி என்பதுபோல சிலர் நினைக்கலாம், நான் கூறவருவது இப்படி பெண்கள் மாறியதற்கு ஆண்களும் ஒருவிதத்தில் காரணம் தானே! ஆண்களுக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கு, ஆசைகள் இருக்கு என வெளிப்படையாக ஏன் அவர்கள் சொல்வதில்லை தான் ஆண் என்கிற [ஈகோ], ஆண் என்பவன் பலசாலி, எதையும் சாதிப்பவன் என்கிற அளவுகடந்த நம்பிக்கை, இது உலகம் அறிந்த உண்மைதான். அப்படியும் சில இடங்களில் இன்னமும் ஆண்கள் தற்கொலை செய்வது அதிகரிக்கிறது அனால் அதிகம் விஷயங்கள் வெளிவருவதில்லை ஏன் இப்படி?
ஆண்களும் கொஞ்சம் மனம் திறவுங்களேன் எண்ணங்களை சொல்லுங்களேன் , நான் அழசொல்லவில்லை, மற்றவரிடம் கருணை கேட்டு நிற்க சொல்லவில்லை, தன்னை பற்றி பேசுவதில் ஆண் என்கிற கர்வம் வேண்டாமே!
KRSHI!