
* வீடுதோறும் கிரைண்டரும், மிக்சியும் சேர்த்து தரப்படும்.
இனி தினமும் மூன்று வேலையும் இட்லி சட்னிதான் பெண்களை தொல்லை செய்யாதிங்க இல்லை போராடுவோம்!
* ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தாலி இலவசம்.
வரும் காலத்தில் இப்படி சண்டை வரும் "உங்க அப்பனா போட்டான் தங்க செயின் ஓசியிலே மிளகா அரைசிட்டான்!
* விதவைப் பெண்கள் அனைவருக்கும், இலவச தையல் மிஷின் வழங்கப்படும்.
இனி மறுமணம் என்கிற புதுமை புரச்சியும் இல்லை சமுதாயம் சொல்லும்
"அதான் தையல் மிஷின் இருக்கே துணி தச்சு புழச்சிக்கோ"
* அனைத்து குடும்பங்களுக்கும் இலவச மொபைல் போன் வழங்கப்படும்.
இனி மெகாசீரியல்க்கு பதில் மொபைல் சத்தம் காது கிழியும்!
* ஆறாம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்.
டேய் நிறைய மதிப்பெண் எடுத்து பாஸ் ஆனால் உனக்கு அப்பா சைக்கிள் வாங்கி தருவாருடா..
போம்மா எப்படியும் அரசாங்கம் கொடுக்க போறது சைக்கிள் நிறைய மார்க் எடுத்து பாஸ் ஆகணும்ன்ன மோட்டார் சைக்கிள்வாங்கி கொடு ...
* கூலித் தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச சைக்கிள்.
எங்க பொழுது விடிந்து இவ்வளவு நேரமும் தூங்கறின்களே வேலைக்கு போகலையா?
அதான் சைக்கிள் இருக்கேடி மெல்லமா போனா போதும்!
* அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கும் கல்வி உதவித்தொகை.
அனைத்தும் தெரிந்தவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும்!
* அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக அரசின் சார்பில் கேபிள், "டிவி' இணைப்பு வழங்கப்படும்.
உழைப்பது எல்லாம் இப்போ ஒரு பிழைப்பா? ஓசியில சாப்பிட்டோம் ஓசியில டிவி பார்த்தோமா என இல்லாமல்!!!!
* குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும், 30 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.a
அப்பாடா இனி சக்கரை வியாதி என ரொட்டி செய்ய சொன்னால் அரிசி வீணாகும் என தப்பிக்கலாம்!
* குடும்ப அடடைதாரர்கள் அனைவருக்கும் மாதம் ஒரு லிட்டர் இலவச மண்ணெண்ணெய்.
மருமகளை செலவில்லாமல் ஓசியிலே கொலை செய்யலாம்!
* மாணவ, மாணவியருக்கு தகுதி அடிப்படையில் இலவச, "லேப்-டாப்' வழங்கப்படும்.
டேய் இனி cafe போக வேணாம்! ப்ரீ மொபைல், ப்ரீ லேப்டாப் ஹ்ஹ்ம்ம் ப்ரீ இணையதளமும் கொடுக்க சொல்லணும்டா!!!
* மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
Thank God !!!!! கடனை அடைக்க வேலை தேடி அலைய வேண்டியதில்லை!
* அரசு மருத்துவ காப்பீட்டுத் தொகை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
பாவம் மருத்துவத்திற்காக படித்தவர்கள்
*****தமிழ் நாட்டின் நிதி மந்திரி அன்பழகன் அவர்கள்தான் பாவம் இப்போதே யோசிக்கணும் மாத சம்பளதாரர்களிடம் எப்படி வரி பிடுங்கணும் இல்லை, இல்லை கொள்ளை அடிக்கணும் என தூக்கம் வாராமல் துவளப்போகிறார்!
KRSHI!