பறவைகள் பார்த்து பறந்தோம்
விலங்கினம் பார்த்து வளர்ந்தோம்
கலகங்கள் மட்டுமே படைத்தோம்
சுயநலங்கள் மட்டுமே விதைத்தோம்
மனித பரிணாம வளர்ச்சியில் பரிதாபமே பரிபூரணமாக.....
தன் சந்ததிக்கு உயிர் கொடுத்து உணவு கொடுத்து வளர்த்து வழி காட்டும் பசு,பறவைகள்
காலப்போக்கில் தன்னை பாதுகாப்பதற்கோ தன்னை பராமரிக்கவோ அதன் சந்ததிகளை வளர்ப்பதில்லை அவைகளிடம் எதிர்பார்ப்பதில்லை,
ஆனால் விலங்கினம் பார்த்து வளர்ந்த மனிதன், அதனை பார்த்து தன் அறிவை வளர்த்த மனிதன் தன் சந்ததி தன்னை ஆதரிக்க வில்லை ,கவனிக்க வில்லை என்று ஏன் புலம்புகிறான், சுயநலம் எனும் நலத்தைத்தான் மிக அழகாக சந்ததிக்கும் ஊட்டி வளர்க்கிறான்,
பிறப்பிலேயே மனிதன் எதிர்பார்ப்புடன் பிறக்கிறான் வளர்ப்பிலும் கொடுக்கல் வாங்கலிலே சந்ததியையும் பழக்குகிறான் அழாம இருந்தால் பலூன் வாங்கி தரேன்,எனக்கு முத்தம் கொடுத்த உனக்கு மிட்டாய் என்று, தன் கடமை செய்கிறேன் என சொல்லும் மனிதன் அந்த கடமையையே கண்ணாக அல்லாமல் கடனாக மாற்றுகிறான், அன்பு,பாசம்,அறிவு, என்ற சொற்கள் மனிதனை விட பிராணிகளுக்கே பொருந்தும்,
பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கு பிறகு ஏதும் இல்லை வளரவில்லையா ,மனிதன் வளரவிடவில்லையா?
KRSHI