Friday, December 20, 2013

சட்டம் இருட்டறையா? இரட்டை அறையா?






விவாகரத்து பெற்ற கணவர் மனைவி இருவரில் ஜீவானாம்சம் என்று பயன் பெறுவது மனைவி மட்டுமே இது சட்ட பூர்வம், இது அந்த பெண் வருமானம் ஈட்ட இயலாத சூழ்நிலையில், [வேலைக்கு போகாத நிலை] கணவர் ஜீவானாம்சம் கொடுக்கலாம், சட்டமும் ஒழுங்கு எனலாம்,

அதே நிலை ஒரு கணவருக்கு வந்தால் அவரின் மனைவி ஏன் அந்த ஆணுக்கு ஜீவானாம்சம் கொடுப்பதில்லை? மேலும் விவாகரத்து பெற்ற பிறகு தன் கடமையில் இருந்து தவறிய பெண்ணுக்கு தன் கடமை தவறாது அவள் கணவர் அவளுக்கு ஜீவானாம்சம் கொடுக்க வேண்டும், இதில் இன்னும் ஒரு பாதிப்பு அவர் பரம்பரை சொத்தில் இருந்தும் அவர் மனைவிக்கு பங்கு உண்டு,

இந்த காலத்தில் பல இடங்களில் கணவரை விட அதிக வருமானம் பெரும் மனைவியர் இருக்கின்றனர் அவர்களுக்கு எதற்கு ஜீவானாம்சம்?? புரியாத சட்டமாக இருக்கு, எல்லா விதத்திலும் சம உரிமை தேவை எனும் "பெண்ணீயம்" இதற்கு எந்த கண்ணியமான பதிலும் சொல்லாமல் "TRACK" மாறி கொடி தூக்கும், இப்படி சில,பல அத்தியாவச விஷயங்களில் பெண்ணியத்தின் அணுகுமுறை பசுத்தோல் போர்த்திய கரடியாக உள்ளது.

தற்சமய வாழ்க்கை முறையில் பல இடங்களில் சாமார்த்தியமான சாகச பெண்கள் இதை மிக அழகாக பயன்படுத்தி திருமணம் செய்த 3,6 அல்லது ஒரு சில வருடதிற்குள் விவாகரத்து பெற, [பெற்று] ஏமாற்று வித்தை நடக்கிறது.

வரதட்சணை பற்றி வாய் ஓயாமல் கத்தி ஆர்பாட்டம் செய்யும் இந்த பெண்ணியம் இதை பற்றி ஒரு நாளாவது அலசியிருக்குமா??? பெண்ணியம் இதை அலசாவிட்டால் போகிறது சட்டமாவது இப்படி சில தவறான விஷயங்களுக்கு பச்சை கொடி காட்டாமல் ஆலோசிக்க வேண்டும்.

KRSHI!