Tuesday, January 14, 2014

பத்து விரல் நேசம் !




           எந்த ஒரு உறவும் நிலைத்து பற்றாவதும் ,முற்று பெறுவதும் இரு கைகள் இணைந்து ஓசை எழுப்புவது போன்றதுதான் விட்டு கொடுத்து இணைந்து செல்வதில் தான் உள்ளது

முதல் விரல் முத்தாய்ப்பு
இரண்டாம் விரல் புன் சிரிப்பு
மூன்றாம் விரல் நலம் விழைப்பு
நான்காம் விரல் நலம் அழைப்பு
ஐந்தாம் விரல் எதிர்பார்ப்பு
ஆறாம் விரல் காத்திருப்பு
ஏழாம் விரல் கடும் கசப்பு
எட்டாம் விரல் மன்னிப்பு
ஒன்பதாம் விரல் வெறும் வெறுப்பு

பத்தாம் விரலையாவது எனக்கு விட்டு விடு  என்றாவது சந்திக்க நேர்ந்தால் இவர் தான் என் நண்பர் அல்லது உறவினர் என வெறுமையாய் அறிமுகபடுத்த,

           இப்படி காற்றில் இரு கை விரல்களாலும் ஓசையை எழுப்பி ஓய்ந்து போவதை விட, இருகரம் கூப்பி என்றும் நிலைக்கும் ஒரே ஒரு வணக்கத்துடன் உறவுகளை வளர்த்தால் எதிர்பார்ப்பும் இல்லை, ஏமாற்றம் அறவே இல்லை!!

       உதவி என்பதும் 10 விரல் போன்றுதான் என்னதான் ஒருவர் அன்பு, பாசம், தியாகம், என வாழ்ந்தாலும் என்றாவது ஒரே ஒரு முறையாவது அவருக்கு எதிர்பார்ப்பு இருக்கும், வாழ்நாள் முழுதும் அவர் பத்து விரல் கதையாக எல்லாம் கொடுத்துவிட்டு,ஒரு முறை கூட மற்றவரின் உதவி அவர் பெறவில்லை எனில் அது நியாயமற்ற நிலையைத்தான் குறிக்கும்,

          சுற்றத்தின் சுயநலம் என்பது அவரை எப்படி சிதைக்கிறது என்பது அவருக்கு தெரிய வரும் பொது அவர் கை இழந்து கை கூப்பும் மனிதனாகிறார். KRSHI!!!