கண்ணீரின் உதயம்
தாக்கும் ஆயுதமா?
காக்கும் கேடயமா?
வேதனையின் போதும்,வலியின் போதும் உடல் சொல்ல துடிக்கும் ஊமை மொழியே கண்ணீர், இதை எதிரியை வீழ்த்த பயன்படுத்தும் கடைசி ஆயுதம் என ஏன் சொல்கிறார்கள்?
"கண்ணீர் என்பது கடைசி ஆயுதம்,எவரையும் இது கவிற்கும் பாலம்" என்று சொல்லும் இந்த ஆயுதம் ஏன் அனைத்து போராட்டங்களிலும் வெற்றி பெறுவதில்லை?? எத்தனை பெண்கள் தனக்கு எதிராக தன் பெண்மை அழிக்கப்படும் போது இந்த ஆயுதத்தை பிரயோகித்து இருப்பார்கள், எத்தனை மனிதர்கள் கொலை ,கொள்ளை செய்யப்படும் போது இந்த ஆயுதத்தை பயன்படுத்தி இருப்பார்கள் ஏன் இவர்கள் வெற்றி பெறுவதில்லை??
"இரங்கா மனமே கிறங்காத குணம்" போல் மனபலம் உள்ளவர்கள் அழுவதில்லை என்றும் சொல்கிறார்கள், அப்படி என்றால் மனதளவில் வலிமையாக உள்ள பெண்களிடம் மட்டும் ஏன் இந்த ஆயுதத்தை அதிகம் காண்கிறோம் பெண்கள் மனபலம் இல்லாதவ்ர்களா?
"இளகிய மனமே இயலாமையால் அழும் " என்பதால் மனபலம் அதிகம் இல்லாத இளகிய மனம் உள்ள ஆண்கள் தானே இந்த ஆயுதத்தை பயன்படுத்த வேண்டும் ஏன் இல்லை அப்படி என்றால் ஆண்கள் மனபலம் அதிகம் உள்ளவர்களா??
இரக்கமுள்ள மனிதர்களை மட்டுமே தாக்க கூடியதா இந்த ஆயுதம் அப்படி என்றால் ஆயுதம் என்பதற்கு பதில் கேடயம் என சொல்லலாமே, போரட்டத்தில் கேடயத்தை வைத்து தற்காக்க மட்டுமே இயலும் வெற்றிபெற இயலாது !
KRSHI!