Saturday, December 12, 2009

அன்பே சிவம்!




“அன்பே சிவம்”

விரும்பாதே! என யாராலும் யாரையும் சொல்ல முடியாது இது ஒரு அடங்காத இயற்கை! ஒருவரை ரசிக்காதே! என கூறலாம் கண்களை கட்டி கொண்டால்,காதுகளை பொத்திக் கொண்டால் இதை செய்ய [தடுக்க] முடியும்!
விலகாதே! எனவும் கூறலாம் இதை அன்பினால் ,ஆசையினால்
வேண்டி கேட்க முடியும்! மயங்காதே ! என தடை செய்யலாம் இது [மயக்கம்] பல வகை அதனால் கண்டிப்பாக அடக்க முடியும்! கலங்காதே! என அரவணைத்து கூறலாம் இதை அன்பால், காதலால் ,ஆறுதலால் கட்டுப் படுத்த முடியும் ]
இப்படி பல உணர்வுகள் மாநிதான் குணத்தில்,வாழ்வில் உள்ளது..இதில் " விரும்பாதே!" ,"விரும்பு!" என்பது யார் கட்டுப்பாட்டிலும் வராத ஒரு இயற்கை உணர்வு, இந்த விஷயத்தில் மட்டும் ஆயிரம் பொன் ,பொருள் கொடுத்தாலும் அல்லது ஒன்றுமே கொடுக்கவில்லை என்றாலும்,ஏதும் இல்லை என்றாலும் இந்த விஷயத்தில் மனிதனின் மனம் தன் இஷ்டம் போல தான் நடக்கும்....

உலகில் மனிதனின் கட்டுக்குள் வராதது ஒன்றே ஒன்று இதுதான் அவன் "மனம் அல்லது, உள்ளம் அல்லது, இதயம்" சரி, விரும்பாதே!,விரும்பு! என உங்கள் மனதை கெஞ்சி,கொஞ்சி அதட்டி முயற்சித்து பாருங்களேன் பார்க்கலாம்!

விரும்பாதே, விரும்பு !என யாரையும் யாரும் சொல்ல முடியாது ஏன்? அவன் தன்னையே கூட சொல்ல முடியாது .... ஏன் என்றால் அதுதான்,

அன்பே சிவம்! அன்பே சிவம்!
KRSHI!

Monday, September 7, 2009

"சிந்திக்க ,சிரிக்க, கொஞ்சம் சினம் கொள்ள [பழமொழியை கிண்டல் செய்ததற்காக!] "


துஷ்டர்களை கண்டால் தூர விலகு !
ஏன்? அவர்களின் கஷ்டங்களை களை எடுக்கலாமே !

பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் !
நெருப்பு சமானமில்லை எனில் சோறு
"நறுக்" அரிசியாகுமே !

கண்ணால் காண்பதும் பொய்,
காதால் கேட்பதும் பொய்,
தீர விசாரிப்பதே மெய் !
விசாரிப்பும் ,விளக்கமுமே பொய்யானால்?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் !
முகச்சாயம் போட்டவரின் அகத்தின் அழகு ?

அமாவாசை சோறு என்றைக்கும் அகப்படுமா ?
[அகப்படும் தினமும் விரதமிருந்து அன்னம் உண்டால்]
நிலா சோறு மட்டும் தினமும் கிடைக்குமா?

காற்றுள்ள போதே தூற்றி கொள் !
ஏன்? மின்விசிறி பயன்படுத்தலாமே !

அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்!
அழவேண்டாம் அறுவை சிகிச்சை இருக்கும் வரை !

ஆழமறியாமல் காலை விடாதே !ம்ம்
ஆழ்கடலில் நீந்த பழகிக்கொள்ளலாமே !

ஆனைக்கும் அடிசறுக்கும் !
சகதியில் அழைத்து செல்லவேண்டமே!

கழுதை அறியுமா கற்பூர வாசனை ?
மணம் அறிந்து சொல்ல கழுதைக்கு மொழி தெரியாதே !

பட்ட காலிலே படும் !
கட்டு கட்டி செல்லலாமே !

KRSHI!

Sunday, August 23, 2009

"சில முரண்பாடு!"



இராமாயணம் !

மரியாதை புருஷோத்தமன் என போற்றபடும் ஸ்ரீ ராம் தன் மனைவி
சீதா மாதாவை தனியாக தவிக்க விட்டது ஏன்? அது சரியா? ஸ்ரீ ராம் தன் கடமையை செய்ய தவறியது ஏன்? அதுவும் சரியா? கடவுள் எது செய்தாலும் சரி என்று அதை ஒரு உதாரணமாக சொல்லி ஆண்கள் செய்யும் தவறுகள் எல்லாம் சரிதான் என சமுதாயம் ஏற்று கொள்கிறது ஏன்? ஸ்ரீ ராம் வாலியை பின்புறம் இருந்து அம்பு எய்து தாக்கியது சரியா? [இன்னும் பல ]..

மகாபாரதம் !

குந்தி தேவி சொன்னதற்காக தாயார் பேச்சை தட்டாத புதல்வர்கள் [பாண்டவர்கள்]..ஒரே பெண்ணை [திரொளபதி] மணந்தார்கள்,அதே புதல்வர்கள் தாய் குந்தி தேவி ராஜ்யமும் வேண்டாம், போர் செய்யவும் வேண்டாம்,என்று சொல்லும் போது மட்டும் அதை ஏன் அப்புதல்வர்கள் கேட்கவில்லை?
மேலும் கிருஷ்ண பகவான் ராதையை காதல் செய்து, கடமை அழைக்கிறது என தனியாக தவிக்க விட்டு சென்றார் அது சரியா? ஏமாற்றம் என்பதும் அந்த கடவுளால் தான் உண்டாக்க பட்டதா? அதன் பின் கிருஷ்ண பகவான் தன்னை அழைக்கும் முன் ராதையைதான் முதலாக அழைக்க வேண்டும் என வரம் கொடுத்து இதான் காதல் என உலகத்திற்கு உணரவைத்தார். இதையே காரணம் காட்டி சிலர் செய்யும் செயல்களை என்ன சொல்வது? ஏன் இப்படிபட்ட சில முரண்பாடுகள் புராணங்களில் சொல்லப்பட்டது.[இன்னும் பல ]......
தொடரும்.......

KRSHI!







Thursday, August 13, 2009

"பிள்ளைகள்"

பணம் குவிக்கும் தொழிற்சாலை!

தற்காலம் பாட சாலை என்பது அறிவை பேருக்கும் பாட சாலையாக இல்லாமல் பணம் குவிக்கும் தொழிற்சாலை என்பது அனைவரும் அறிந்ததே! வளரும் [தளிர்கள்] குழந்தைகளுக்கு பல விஷயங்களை சொல்லி கொடுக்கும் நாம் நம்மை அறியாமல் லஞ்சம் வாங்குவதையும், கொடுப்பதையும் சொல்லி கொடுக்கிறோம்...முகஷ்துதி எப்படி செய்வது என்பதையும் கற்றுதருகிறோம்....

பள்ளிக்கூடம் எதுவா இருந்தாலும் , பிள்ளைகள் படிக்கும் விதம் தான் முக்கியம் ஒரு நாளைக்கு ஆறு முதல் ஏழு மணி நேரம் படிக்காத பிள்ளைகள் டியூஷன் என்கிற பேரில் ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திலா அறிவாளியாக மாறிடுவாங்க? யோசிக்க வேண்டிய விஷயம் அதே நேரம் சில பிள்ளைகள் டியூஷன் படிப்பது தாம் படிக்கும் அதே வகுப்பு ஆசிரியரிடம் அல்லது தான் படிக்கும் அதே பள்ளி ஆசிரியரிடம் படிக்க அடம் செய்வது ஏன்? பதில் [சில ] not [பல] எங்க வகுப்பு ஆசிரியரிடம் படித்தால் தான் நிறைய மதிப்பெண் கொடுப்பாங்க [ இங்கு குழந்தையிலேயே லஞ்சம் கொடுப்பது வளர்கிறது ] இதில் மறைமுகமாக பள்ளி நிர்வாகம் இடம் வகிக்கிறது .

சில பள்ளி நிர்வாகம் தன்னுடைய Annual Report காகத்தான் பாடுபடுகிறது.. அனால் குழந்தைகள் படிப்புக்காக அல்ல....சில பள்ளி ஆசிரியர்கள் தன் வகுப்பு பிள்ளைகளுக்கு Revision என்கிற பேரில் தேர்வு தாள்களில் வரும் கேள்விகளின் பதில்களை மட்டுமே சொல்லி கொடுக்கின்றன...[முக்கிய பங்கு டியூஷன் ஆசிரியர் ]பிள்ளைகளின் அறிவை ஒரு வட்டத்திற்குள் அடக்குகிறோம் ...


இப்போ இருக்கும் பிள்ளைகள் சிறந்த அறிவாளிகள்.. மனிதன் தன் மூளையை குறைந்த அளவே பயன்படுத்துவதாக மேதைகள் கூறி இருகிறார்கள் அனால் இப்போ உள்ள பிள்ளைகள் கொஞ்சம் அதிகமாகவே தன் மூளையை பயன்படுத்துறாங்க... அப்படி இருக்க நாமும் கொஞ்சம் பிள்ளைகளுக்கு உதவிய இருப்போமே...
தொடரும்...
KRSHI!




May be May not be!



இணையதள நண்பர்கள்! எதிர்வீட்டு நண்பர்கள்!

எதிர்வீட்டு நண்பர்களை விட இணையதள நண்பரகள் அதிகமாவது ஏன்?
இப்படி இருக்கலாம், எதிர்விட்டு நண்பர்கள்,நண்பிகளிடம் I Love u,I Miss u இன்னும் பல விஷயங்கள்
…….சொல்ல முடியாது,அவர்கள் மனைவி கட்டை எடுத்து வருவாள்,கணவன் துப்பாக்கி எடுத்து வருவான் [தேவையா அது?] [May be May not be!]

எதிர்வீட்டு நண்பர்களிடம் ஒரு மணிநேரம் அல்லது பல மணிநேரம் தொடர்ந்து தனியாக பேசமுடியாது,காரணம் சமுதாயம் தாறுமாறாக பேசும் என்கிற பயம்,அவர்களை ‘டா’ , ‘டி’ என அழைக்க முடியாது காரணம் சிரிக்க பற்கள் இருக்காது,எந்த கவலைகளையும் நேரில் எதிர்படும் நண்பர்களிடம் சொல்ல நம் ஈகொ தடுக்கும்
[EGO] [May be May not be!]

இணையதள நண்பர்களிடம் எத்தனை முறை வேண்டுமென்றாலும் மன்னிப்பு கேட்க வெட்கப்படுவதில்லை ஆனால் நேரில் எதிர்படும் நண்பர்களிடம் ஏதும் பேச ,கேட்க நம் ஈகொ தடுக்கும், [May be May not be!]

இணையதள நண்பர்களிடம் சின்ன, சின்ன ஆசைகள் [அல்ப] பற்றி விவாதிக்கலாம் எதிர்வீட்டு நண்பர்களிடம் அப்படி செய்ய முடியாது! எப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள், எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதற்க்கு விளக்கம் தருபவர்கள் இணையதள நண்பர்கள்.


எப்படியெல்லாம் தாவலாம்,எப்படியெல்லாம் தப்பிக்கலாம் என்பதற்க்கு விளக்கம் தருபவர்கள் நேரில் எதிர்படும் நண்பர்கள். மேலும் இவர்கள் தன்னைப் பற்றியே முதலில் நினைப்பவர்கள், நம்பிக்கை என்பது கொஞ்சம் கடினம்தான். These are “Give and take policy” [May be May not be!]

இணையதள நண்பர்கள்,நண்பிகளை நாம் நேரில் பார்ப்பதும் இல்லை, அவர்களை பற்றி சரிவர தெரிவதும் இல்லை, அவர்கள் யாரோ, எப்படியோ, எப்படி இருந்தாலும் e-Mails & Chatting மூலம் நம் தனிமையை விரட்டுபவரும் அவர்களே, தன்னம்பிக்கையை வளர்பவரும் அவர்களே! These are “If it comes then it is good! If it doesn’t it is ok! or Take it easy policy! [May be May not be!]

தொடரும் ...

KRSHI!