
இராமாயணம் !
மரியாதை புருஷோத்தமன் என போற்றபடும் ஸ்ரீ ராம் தன் மனைவி
சீதா மாதாவை தனியாக தவிக்க விட்டது ஏன்? அது சரியா? ஸ்ரீ ராம் தன் கடமையை செய்ய தவறியது ஏன்? அதுவும் சரியா? கடவுள் எது செய்தாலும் சரி என்று அதை ஒரு உதாரணமாக சொல்லி ஆண்கள் செய்யும் தவறுகள் எல்லாம் சரிதான் என சமுதாயம் ஏற்று கொள்கிறது ஏன்? ஸ்ரீ ராம் வாலியை பின்புறம் இருந்து அம்பு எய்து தாக்கியது சரியா? [இன்னும் பல ]..
மகாபாரதம் !
குந்தி தேவி சொன்னதற்காக தாயார் பேச்சை தட்டாத புதல்வர்கள் [பாண்டவர்கள்]..ஒரே பெண்ணை [திரொளபதி] மணந்தார்கள்,அதே புதல்வர்கள் தாய் குந்தி தேவி ராஜ்யமும் வேண்டாம், போர் செய்யவும் வேண்டாம்,என்று சொல்லும் போது மட்டும் அதை ஏன் அப்புதல்வர்கள் கேட்கவில்லை?
மேலும் கிருஷ்ண பகவான் ராதையை காதல் செய்து, கடமை அழைக்கிறது என தனியாக தவிக்க விட்டு சென்றார் அது சரியா? ஏமாற்றம் என்பதும் அந்த கடவுளால் தான் உண்டாக்க பட்டதா? அதன் பின் கிருஷ்ண பகவான் தன்னை அழைக்கும் முன் ராதையைதான் முதலாக அழைக்க வேண்டும் என வரம் கொடுத்து இதான் காதல் என உலகத்திற்கு உணரவைத்தார். இதையே காரணம் காட்டி சிலர் செய்யும் செயல்களை என்ன சொல்வது? ஏன் இப்படிபட்ட சில முரண்பாடுகள் புராணங்களில் சொல்லப்பட்டது.[இன்னும் பல ]......
தொடரும்.......
KRSHI!