Tuesday, February 15, 2011


பகலும் இரவும் கண் விழித்து!
இமைகள் வலிக்க தினம் உழைத்து!
வருமானம் வரும்வரை நாள் கழித்து!
வருமானவரி எனும் நாம் தரும் தானம்!
இலவசம் எனும் வழிக்கடை தேங்காய
பிள்ளையருக்கு உடைக்கும் அரசாங்கம்!

மகராசா நல்லா இருக்கோணம் என வாழ்த்தும்,
மறைமுக புண்ணியம் நமக்கே!
அதனால் அரசாங்கதிற்க்கு கொடுங்கோ மறக்காமல் வருமானவரி தானம்!

இலவசம்! இலவசம்! இலவசம்
எங்கள் ஆளுமையில் எங்கும் இலவசம்! எதிலும் இலவசம்!
தொலைக்காட்சியின் தொல்லைகாட்சியான தொடர்காட்சிக்கு [மெகா சீரியல்] இலவச விளம்பரம்:-
தாய்மார்களே வாங்கிகோங்க வண்ண தொலைகாட்சி இலவசம்!முதலிலே தொலைகாட்சி இருக்கா? இலவச தொலைகாட்சியை படுக்கை அறையில் வைங்கோ, அங்கேயும் தொலைகாட்சி இருக்கா? சமையல் அறையில் வைங்கோ! சமைச்சிகிட்டே பாருங்க எங்க வண்ண தொலைகாட்சியை, பார்த்திங்களா! தாய்மார்களுக்கு நாங்க எவ்வளவு சேவை செய்கிறோம்! என கூவும் அரசாங்க கூஜாக்கள்!

ஒரு வீட்டுதலைவரின் புலம்பல்:-
ஹ்ஹ்ம்ம் ஏற்கனவே தொடர்காட்சியால் பல பரிணாம வளர்ச்சி சமையலில், இதில் சமையல் அறையிலே தொலைகாட்சியா? காபியில் உப்பும், கறியில் சக்கரையுமாக சாப்பிட பழகிக்கோடோய்!

சரி அப்படியே போய் ஒரு பொடி நடை போட்டு எத்தனை வீட்டில் இலவசபொருள்கள் இருக்கு என சோதனை செய்யுங்க
எல்லாம் குறைந்த விலையில் விற்கப்பட்டு அனைவரும் குட்டி குட்டி வியாபாரியாகி மாறியிருப்பார்கள். நல்லது புதுமையாக உதவுகிறது அரசாங்கம் சுயாமாய் தொழில் செய்ய!
[???!!!!!!!!!!!!!]

KRSHI!

Sunday, February 13, 2011

பேருந்து நிலைய கழிப்பறை!
நாகரீக யாசகம்!

"Urinal for free! but..
Give a rupees three!"


பேருந்து நடத்துநர்!
நாகரீக திருட்டு!

Give me a change! but..
Dont ask me extra change!


அர்ச்சகர்கள்!
கவனமில்லாத கடமை!


"என்ன அர்ச்சனையா?"சுக்லாம் பரதரம் விஷ்ணும்!
"சாமி பேருக்கா?"சசிவர்ணம் சதுர்ப்புஜம்!
"சொல்லுங்கோ நட்சத்திரம்" ப்ரஸன்ன-வதனம் த்யாயேத்!
"சொல்லுங்கோ கோத்திரம்" ஸர்வ-விக்னோப-சாந்தயே!
"சொல்லுங்கோ,சித்த இருங்கோ டெய் அம்பி இவாளுக்கு அர்ச்சனையாம் பார்த்துக்கோடா..
[ஓடுகிறார் திடிர் என பிரவேசித்த சட்டசபை உறுப்பினரை கவனிக்க!]

ஏன்? இப்படி ஆண்டவன் சன்னிதியிலும்
கடவுள் "அர்ச்சனை" இல்லாமல் நமக்கு அருள் செய்யமாட்டாரா?
KRSHI!