ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும்
ஒரு பெண் இருக்கிறாள்!!!!!
என சொல்லும் சமூகம்
ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னாலும்
ஒரு ஆண் இருக்கிறான்!
என ஏன் சொல்வதில்லை?????
ஒரு ஆணின் வளர்ச்சிக்கு பின் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்ல கேட்டு இருக்கோம்! ஒரு பெண்ணின் வளர்ச்சிக்கு பின் ஒரு ஆண் இருப்பான் என்று சொல்ல கேட்பது மிக அறிது [எந்த ஒரு தருணத்திலும் ஒரு ஆண் தன்னை ஒரு பெண்ணுக்கு அடுத்தபடியாக வைத்து பார்க்க விருப்பம் கிடையாது என்பது அனைவரும் அறிந்தது] தன்னை ஒரு பெண்ணுக்கு நிகராக வைத்து பார்ப்பது என்பதே முடியாது எனும் போது, இதில் ஒரு ஆண் பெண்ணுக்கு பின் என்பது ஊமையானது,
அதே நேரத்தில் பல பெண்கள் வெற்றிக்கு பின்னும் ஆண்கள் இருக்காங்க ஆனா அப்படி சொன்னால் உடனே சமுதாயத்தின் தவறான கணிப்பே [ பார்வை ] பெரியதாக பேசப்படுகிறது, பெண்களை பற்றி, அவர்களின் கற்பை வைத்தே நிறைய கதைகள் பின்ன பட்டு இருக்கு, இன்னும் பின்ன படுகிறது இது உலகமே அழிந்தாலும் மாறாத இயற்கை போல், கலாசாரம் கெடக்கூடாது என்பதில் கவனமா இருக்கும் சமுதாயம் பெண் இனம் பல விஷயங்களில் இழிவு படுத்த படுகிறதே அது ஏன் என்பதில் மட்டும் ஏன் அதிகம் கவனமா இருப்பதில்லை??
ஒரு குடும்பத்தின் கணவனுக்கு அவன் மனைவி மந்திரியாக நடந்துகொண்டால் அந்த குடும்பம் பல்கலைகழகமாகும், அரசியானால் அந்த குடும்பம் அடிமையாகும் [நாசமாகும்] என பெரியவர்கள் சொல்ல கேட்டு இருக்கோம். மந்திரியாக இருந்தால் நல்லவை,கெட்டவை,என்பதில் கவனமும் ,எதையும் வரும் முன் காப்போம் என்கிற எண்ணமும் வரும், அரசியாக இருந்தால் தான் என்கிற கர்வம் மேலோங்கி, கடமையை விட கட்டளைகளையே பிறப்பித்து வெற்றி தோல்வி என்பதில் மட்டுமே கவனமும் கண்ணோட்டமும் இருக்கும்
இன்றும் பல வீடுகளில் வேலைக்கு செல்லும் பெண்கள் மாத கடைசியில் கையெப்பம் இட்டதும் தன்மாத வருமானம் அவர்கள் கைகளில் வராமல் [வராமல் என்ன கண்களில் கூட காணாமல்] கணவன் கையில் அல்லது அவன் வீட்டாரின் கைகளில் செல்கிறது, இது பெண்ணுக்கு மட்டும் அல்ல சில ஆணுக்கும் நடக்கிறது இதை விட பல மடங்கு வீடுகளில் ஆண்களின் அடிமை நிலையும் இதேதான், சில வீடுகளில் தன் ATM கார்ட் முதல் கொண்டு அனைத்தும் மனைவியிடம் கொடுத்து விட்டு தின கூலியாகவும் இருக்காங்க, ஆண்களில் இதை யாரும் பெரிய தவறாக எண்ணுவதில்லை, ஆனால் இதே பெண்கள் விஷயம் என்றால் சமுதாயம் அதை ஒரு பெரிய விஷயமாக்கி அந்த வீட்டில் உள்ளவர்கள் முதல் கொண்டு உலகத்தையே தன்னை பார்க்கும்படி பெண்கள் சுதந்திரம் பற்றி பேசி அந்த குடும்பத்தையே ஒன்றும் இல்லாமல் செய்து விடுகிறது
ஆண் பெண் சமம் என கூவும் இவர்கள் இதையும் சமமாக எண்ணி தவறு,சரி என்பதை ஆராய்ந்து செயல்படவேண்டும் ஒரு குடும்பத்தில் உள்ளவர்களின் பலத்திலும் பலவீனத்திலும் இந்த சமுதாயம் முக்கிய பங்கு வகிக்கிறது, ஆண் என்றாலும் பெண் என்றாலும் ஒரு மனிதனை அழிக்க அதே மனித இனம் பயன்படுத்தும் முதல் ஆயுதம் அவனின் கற்பை இழிவு படுத்தும் பேச்சும் ,செயல்களும்தான்
இங்கே ஒன்று சொல்ல விரும்புகிறேன்:-
இந்த தரணியின் தாய் என நாம் வணங்கும் தெய்வம் மாதா பார்வதி தேவி அவரின் பல ரூபங்களின் ஒன்று மா காளிதேவி உலகில் அதர்மங்கள் அதிகமான போது அவர் இந்த அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன, இன்னொரு புராணமும் சொல்லபடுகிறது தன் செல்ல மகனின் தலையை ஆதிபகவன் சிவபெருமானே துண்டித்ததால் கோபகனல் பொங்க காளி ரூபம் எடுத்தார் என்று
நாம் மா காளி தேவியை கருப்பு சேலை உடுத்தி கைகளில் பலவித ஆயுதங்கள் ஏந்தி எதையும் அழிக்க கூடிய கோப சொரூபமாகத்தான் பார்க்கிறோம் உண்மையில் அவரின் அந்த ரூபம் கோபம் தணிந்து நின்ற ஒரு நிலைதான்,மா காளி தேவியின் பாதத்தின் அருகில் தரணியின் தந்தை என வணங்கப்படும் அந்த சிவ பெருமானே படுத்து இருப்பார், மா காளியின் கோபத்தை தணிக்க வில்லை என்றால் உலகின் ஜீவராசிகள் அனைத்தும் அழிக்கபட்டுவிடும் என்கிற ஐயத்தில் தேவர்களும்,முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டதில் மா காளியின் சினத்தை சிதைக்க சிவபெருமானே அவர் வரும் வழியில் குறுக்கே படுத்ததாக சொல்லபடுகிறது சினம் பொங்க தன்னை மறந்து அனைவரையும் மிதித்து, வீழ்த்தி அழித்து வரும் பாதையில் தன்னையும் அறியாமல் தன் பாதத்தில் இடறியது தன் கணவன் என அறிந்து “பதறி ”ஹையோ” இது என்ன உலகின் பரம் பொருளே,என் ஈசனே தாங்கள் மேல் என் காலடியா? என அதிர்ச்சியில் நாக்கை கடித்து கொண்டு அதே ரூபத்தில் தன் சினம் தணிந்து நின்றதாக கதை சொல்லபடுகிறது.
இங்கு குறிப்பிடுவது உலகையே அழிக்க வல்ல அந்த மா காளி தேவியே தன் கணவன் மேல் தன்னையறியாமல் தன் பாதம் பட்டதை பெரிய குற்றமாக,பாவித்து பதறி தன் தவறை உணர்ந்து சினம் தணிந்து நின்றார் என்றால் நாம் அனைவரும் அவர்கள் படைத்த அற்ப மனிதபிறவிகள், கணவனின் முக்கியத்துவமும் அவனின் சுயசிந்தனையும் இதில் சொல்லபடுகிறது மேலும் பிறப்பில் ஆணும் பெண்ணும் சமம் என உணர்த்தவே என்னில் நீ பாதி என்று அர்த்தநாரியாக காட்சி அளிப்பவர்கள் சிவனும் பார்வதியும்.இங்கே இதையும் நகைச்சுவையாக பாவித்து ஒரு பெண்ணின் காலடியில் வீழ்ந்தால்தான் அவள் சினம் தணிகிறாள் என்று எண்ணும் அல்லது சொல்லும் மனிதர்களை எதும் சொல்ல இயலாது,
என்னதான் கதை ,புராணம் படித்தாலும், கேட்டாலும் நாம் அற்ப மனித பிறவிகள் என பல விஷயங்களில் நிருபிக்கிறோம். ஒரு பெண் கணவனிடம் அடி வாங்கினால் அதை கண் மூக்கு வைத்து எவ்வளவு கொடுமையாக சொல்ல முடியுமோ அவ்வளவு கொடுமையாக சித்தரிக்கிறோமோ அதே ஒரு ஆண் மகன் அடி படும் போது மனதாலும் சரி, உடலாலும் அதை ஒரு நகைச்சுவையாக சொல்கிறோம், ரசிக்கிறோம். [இது உண்மை என இதை படிப்பவர் பலருக்கு தெரியும்] இதை ஆண்களே சித்தரிக்கின்றனர் காரணம் எந்த ஒரு ஆணும் தன்னை பலவீனமாக எவர் முன்னிலையிலும் நினைக்க கூட விரும்பவில்லை என அனைவரும் அறிந்ததே!
பெண்ணை விட ஒரு ஆணின் அழுகைக்கும்,வேதனைக்கும் வலி மிக அதிகம்,பொருமை,அமைதி,அன்பு,பாசம் விட்டுகொடுத்தல் என்கிற பல விஷயங்களில் ஆண்கள்தான் முதலிடம் பெறுகிறார்கள், இங்கு பெண்களை தாழ்வாக சொல்லவில்லை பெண்ணை விட ஆண் பல விஷயங்களில் மேன்மை பெற்றவர்கள் என்பது பலரின் கருத்து
முதலில் சொன்ன கருத்தின்படி , எந்த ஒரு பெண்ணின் முன்னேற்றமும் அவரகளின் திறமையை பற்றி அல்லாமால் அவர்களின் கற்பை வைத்தே நிறைய கதைகள் பின்ன பட்டு இருக்கு, இன்னும் பின்ன படுகிறது இது உலகமே அழிந்தாலும் மாறாத இயற்கையாகவே தொடர்கிறது,பெண்ணின் பிறவி ஆணை விட உடலால் பலம் அற்றவளாக இருந்தாலும் மனதாலும்,அறிவாலும் மிக அதிக பலம் உள்ளவளாகவே நிருபிக்கிறாள்
ஆனால் இதை எந்த ஒரு ஆண்மகனும் ஏற்று கொள்வதில்லை "பெண் புத்தி பின் புத்தி" என காலம் காலமாக சொல்லபட்டு வருகிறதே!
["பின்" என்பது [pin] "ஊசி" போல மிக கூர்மையாக இருக்கும் என சொன்னால் பெண்ணை பிடிக்க முடியுமா? குத்தி விடுவாளே என்ற முன் எச்சரிக்கையாக இருக்குமோ???]
மேலும் சொர்ணக்கா என்று சொன்னாலே அனைவருக்கும் ஒரு பயம் கலந்த பதற்றம் இது சினிமாவில் மட்டும் அல்ல, ஒரு ஒரு வீட்டிலும் ஒரு சொர்ணக்கா இருக்கத்தான் செய்கிறார்கள் மாமியாராக,நாத்தினாராக,அண்ணியாக,வெளியே சொர்ணமாக உள்ளே சொர்ணக்காவாக, பிணம் தின்னும் கழுகுகள் போல பணம் தின்னும் அழுகுணிகள்,இந்த கட்டுரையை படிப்பவர்களின் எண்ணங்களில் மாற்றம் இருக்கலாம்,இல்லாமலும் போகலாம் ஆனால் உண்மை என்ன என்பது படிக்கும் மனதுக்கு தெரியுமே!! மனது தானே நீதிபதி,
உலகில் கருணை என்பதை பிடித்து கொண்டு காரியம் சாதிக்கும் பெண்கள் எத்தனை?? அதே நேரம் சகலகலாவல்லவன் போல நடித்து பொய் பேசி காரியம் சாதிக்கும் ஆண்கள் எத்தனை???ஆண்கள் பெண்கள் இருவருமே சமமாக தவறுகள் தெரிந்தும் தெரியாமலும் செய்யறாங்க இது சமுதாயத்திற்கு மிக நன்றாக தெரிந்தும் அதில் லாபம் என தெரிந்தால் போற்றுவதும் நஷ்டம் என தெரிந்தால் தூற்றுவதும் தான் நடக்கிறது, நாம் மனிதர்கள் இது போன்ற விஷயங்களை ஒரு பொழுது போக்கிற்காக பயன்படுத்தி வாழ்கிறோம்,வாழ்க்கையில் அதை உணர்ந்து உணர்த்துவதற்காக அல்ல உண்மைதானே?!
யாராவது பெண்ணாக இருந்து பெண்ணுக்கு எதிராக எழுதிவிட்டால் ஏன் இப்படி எழுதுகிறாய் என முரட்டு காளைகள் போல சில பெண்கள் நல சங்கம் ஓடீ வரும், காரணம்..உழைப்பே இல்லாமல் நம் பெயர் தலைப்பு செய்திகளில் வரும் என்ற பசியில், அதே ஆண்களை பற்றி யாராவது தவறாக எழுதினால் எந்த ஆண்கள் நல சங்கம் ஓடீ வருகிறது? மலையை பார்த்து DOGS குலைக்கிறது என போய் கொண்டே இருப்பார்கள் இதான் ஆண்களின் தன்னம்பிக்கை.
ஒரு பெண் எப்படி இருக்கணும் என நாம் புதியதாக படிக்க போவதில்லை,புரியபோவதில்லை இது தெரியாமல் இருக்க நாம் இந்த Generation உம் இல்லை, ஒரு மனைவி என்பவள் இப்படி இருக்க வேண்டும் என்ற சில வரை முறை சொல்லபட்டு இருக்கு அதன்படி பலர் இருக்காங்க அதில் யார் இருக்காங்க என இதை படிப்பவர்கள் தங்கள் மனதை தொட்டு சொல்லுங்க பார்ப்போம்!!!
கணவன் என்னமோ கையில் பணம் ,காசு கொட்டும் அமுதசுரபி வைத்திருப்பது போல பல வீடுகளில் அவன் காசு கொண்டுவந்தால் நல்ல கவனிப்பு இல்லை என்றால் உஹும் கணவனுக்கு ஃப்ரிஜ் ல இருக்கும் உணவை வழங்கி விட்டு அம்மா வீட்டிற்கு பயணம் அவன் சம்பளத்தை செலவு செய்ய
திருவள்ளுவரின் மனைவி போல ஒரே குரலுக்கு ஒடோடி வரவேணாம்,கண்ணகி போல தனக்கு துரோகம் செய்தும் மன்னித்து கணவனுக்காக ஒரு நாட்டையே எரிக்க வேணாம்,இன்னும் பல சொல்லலாம்..
கடமை கணவனுக்கு மட்டும் அல்ல மனைவிக்கும் சமமானது, இதில் ஆண் பெண் என்ன?? நியாயம் அநியாயம் என்பது மனிதர்களுக்கு சமமானதே, உலகில் ஆண்களும் சமமாக பாதிக்கபடுபவர்கள் என்பது உண்மை,பெண்கள் மட்டும் இரக்கபடுபவர்களுள் அடக்கமில்லை என்பது மிக பெரிய உண்மை.
எந்த ஆண் தன் சம்பளம் வந்ததும் தனக்காக நகை வாங்கவோ, துணி வாங்கவோ ஓடுகிறான் ஒரு ஆண் சம்பாதிப்பில் அவன் தன் வீட்டில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வான் அதே ஒரு பெண் சம்பாதிப்பில் அவள் தன் வீட்டை கவனித்தாலும், அவளின் முழு முதல் கவனம் புதியதாக என்ன சேலை டிசைன், புதியதாக என்ன நகை டிசைன் வாங்கலாம் எனதான் எண்ணும் இங்கு திறமைசாலிகள் ஆண்களா பெண்களா???
அதே நேரத்தில் ஆண்களில் பலர் ஒரு பெண்ணை நம்பி தன் வீட்டில் உள்ளவரை துரத்துவதில்லை, வீட்டை துறந்து வருவதும் இல்லை, அவர்களை யாருக்காகவும் விட்டு கொடுப்பதும் இல்லை ஆனால் சில பெண்கள் சில ஆண்களை நம்பி முற்றிலும் வீடு வாசல் துறந்து வந்து நம்பி நாளடைவில் யாருமற்ற ஆனாதையாக தனித்து நிற்கின்றனர் இங்கு திறமைசாலிகள் பெண்களா? ஆண்களா?
KRSHI!
இந்த விஷயத்தை மிக மேம்போக்காக பார்க்க முடியாது. திருமணம் என்ற உறவே சொத்து அடிப்படையில் ஏற்பட்டதுதான் என மனித சமுக வரலாற்றை ஆராய்பவர்கள் சொல்கிறார்கள். மற்ற சொத்துக்களைப் போல மனைவியும் ஒரு சொத்து என்ற கருத்தாக்கம் சமுகத்தில் ஆழப்புதைந்து கிடக்கிறது. இதை கமாடிபிகேஷன் பொருளாக்குதல் என்கின்றனர். ஒரு பெண் கருவில் உருவானது முதலே அவளுக்குப் பிரச்சனைதான். அரசு தடை செய்துள்ளதா கருவின் பால் இக்டாலத்தில் அரிய முடிவதில்லை. அரசின் இந்தத் தடையே பெண் கருக்களைக் காப்பாற்றத்தான். குழந்தை பிறந்ததுறம் கள்ளிப் பா லிலிருந்து அது தப்ப வேண்டும், தந்தையின் கருணையால்.வளரும் போது ஆயிரம் பிரச்சனைகள், அமில வீச்சு உட்பட. ஒரு பெண் பூப்பெய்தால் ஊரையழைத்து சடங்கு. அப்படி இல்லையானால் வீட்டை விட்டு கல்தா. அழகு என்று ஆண்களின் வரைவில் வந்தால்தான் திருமணம். பள்ளிக்கும் கல்லுரிக்கும் செல்கையில் என்றும் நடக்கும் பாலியல்தொந்தரவுகள். திருமணம் செய்து கொள்ள கேட்கும் வரதட்சிணை.அவர் காதலித்து திருமணம் செய்ய ஆயிரம் தடையை எதிர்த்து வெல்ல வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் வெற்றி நிச்சயமில்லை.
ReplyDeleteI will write more later
ReplyDelete1) She must have survived foeticide or her parents ought to have been kind to allow her to be born.
ReplyDelete(2) She must have survived infanticide or her parents ought to have permitted her to live...
Thanks to the powerful democratic movements of women’s organizations, disclosing the gender of a foetus has been prohibited now. Female infanticide is being campaigned against vigorously in most of the states in India. In Tamil Nadu the government has introduced the Government Cradle System by which people can leave their unwanted children, mostly girls, in the Government Cradles kept in Government hospitals so that the Government could take care of them. It is no accident that this scheme was thought of and implemented by a woman Chief Minister.
(3) She must have attained puberty in time and in medically good condition.
(4) She must have grown up ‘attractively’ in the eyes of men, the prospective groom, at least, because she is a commodity in the marriage market.
(5) She must have got trained in cooking apart from acquiring a reasonably acceptable educational qualification.
What is reasonably acceptable qualification has both class and caste norms which are variables across time—diachronic variables, to use a technical term of Frederic Jameson, though in a different context.
(6) She must have learnt to be obedient, that is, she must have internalised the indoctrination of her parents and other elders imposed on her from her birth. In other words, she must get used to the fact that she can not have her own choice in any thing, be it her dress or her education or her future husband or the style of life.
(7) Once she becomes a wife she must serve her husband and his family as a slave. It is quite strange that in the Indian marriage market slaves are being taken along with a huge price as dowry.
(8) She must give up the religious practices of her parents and follow those of her husband’s family. If it is a marriage across religions, she must give up her religion. If it is within the same religion, she must give up her father’s family God to embrace the husband’s family God. Most of the Hindu families have a family God / Goddess, especially in South India.
(9) She must have the mind and readiness to change her likes and dislikes to suit her husband’s will and pleasure.
10) She must give birth to a son as required by her husband and in-laws, in time.
ReplyDelete(11) She must be tolerant, accommodative and self-effacing to please her husband who is her god from the moment he marries her.
(12) She must learn to forgive and forget her husband’s bad behaviour, from getting drunk often to extra-marital affairs.
(13) She has to take the entire responsibility of the home and child/children. The husband will give his name as the initial of the child/ children where his responsibility stops, which means, giving a social recognition for the child / children. The wife must do her best to bring them up.
(14) She was daughter of some one, wife of some one and slowly evolves as the mother of some one.
(15) If she becomes a widow, the situation changes completely.
(A) Before the early 20th century: she must be prepared to enter the burning pyre of her husband as a sati, that is, in most parts of India. That sati was reported even during the mid and late 20th century in some parts of India is a shameful fact of the life of Indian men and a painful fact of the life of Indian women.
(B) After the early 20th century: she must be prepared to get her head shaven and use white or sandal coloured dress, sleep on the floor and live on one meal a day. She must learn to avoid being the chief guest / host in all celebrations, including the marriages of her children. She must get used to the fact that she is a bad omen and learn to get away from people. Her responsibilities of home keeping, however, will continue.
(C)After the mid 20th century: she must have the courage to live her life. She has to ride on the impact of the democratic women’s movements. Widows’ remarriage becomes a debating issue.
ReplyDelete(D) Late 20th century: she must have the courage to start a new life, as some one’s wife or as an independent working woman.
I will write more
ReplyDeleteTo achieve the respectable status of an independant woman even as a wife a woman's thought processes have to be deconstructed and reconstructed. It is only through and by language
ReplyDeletethat we construct our reality which is linguistically constructed social reality. We construct ourselves in this reality thrugh the texts we speak and write. So a woman's phyche has to be reconstructed through such discussion. For her to sustain herself she has to have education that will ensure her economic independence. It is state that will ensure a woman's respectability.
ReplyDeleteThe perceived economic independence by a woman is too short sighted. The present day education system throws countless so called educated youth into the world where they go aimless/directionless with hardly any idea of their career path. Here women suffer more since they are in such a hurry to showcase their success that they actually are not sure about what/where they want to be. By trying to break the perceived shackles they end up getting into a state of mind where they think that independence means being not responsible to the society. I am not sure that the womenfolk can be bracketed into one homogenous lot in the country. There is a lot of difference between the state of women in the urban/rural/metro. Even in metro it differs from one region to another. India being a huge country with diverse cultures, there is no sameness even in adjacent states like Tamil Nadu and AP/Maharashtra.
DeleteI will b back
Viswanathan
You have just recorded ur perceptions but used them to make sweeping generalisation.The issue raised by is not about any particular individual or many. It is an understanding of the evolution of human civilization. Any way thanks for the remarks.
DeleteU are making a sweeping generalisation with ur limited observation of the society. The points raised are much higher than what u think they are. It is not about a few individuals. It is about the whole history of human civilizatiom. That economic independence empowers woman is not a hasty or short sighted view. It is the conclusion of great thinkers after 5 decades of discussions on all issues. Yes India is hetrogenious in everything except in torturing womam. In this there is homogeniety. In all the languages except Malayalam all abusive words are against women. May be u don't know those words. For all the sufferings of women education and economic independence are the lone solution.
DeleteIndia is large but not larger than world. All over the world women's democratic movements are fighting for nearly 60 years to solve the problem of alienation of woman. Generally we think that what we do not know does not exist or it is wrong. This is a fallacy in logic. When the world thought that the world was a cube Galeleo said it isva globe. He was arrested by the king and ordered to say the earth is a cube. He said I accept that the earth is a cube though it is a globe.
DeleteCertain realities of history are very painful and people who have so idea if those facets of human history make hasty and illogical conclusions. My coworker was bad and so all women are bad workers is a kind of judgement that cannot stand a close scientific examination..
DeleteI will write more.
ReplyDeleteதாங்கள் வருகைக்கும்,உங்களின் இந்த பதிவிற்கும் நன்றி நண்பரே, பல விஷயங்களில் பெண்கள் மிக வேகமாக,அதிகமாக முன்னேறி வருகிறார்கள் அதே நேரம் அன்பு,பாசம்,விட்டு கொடுத்தல்,பக்தி...... இதெல்லாம் அவர்களிடம் குறைந்து கொண்டுதான் போகிறது வளரவில்லை இதற்கு காரணம் பல அதில் "ஏன்? எதற்கு?" என்பதும் மிக முக்கியமான காரணமாக இருக்கலாம்
ReplyDeleteமறைக்க பட்டாலும்,மறுக்கபட்டாலும் இன்னும் பல விஷயங்களில் பெண்களின் நிலை இதான் கிழே கொடுத்துள்ள இணைப்பையும் படித்து பாருங்கள்
http://krshi-in-vaadham.blogspot.in/2014/06/blog-post.html
This comment has been removed by the author.
ReplyDeleteமா தவம்!
ReplyDeleteபாரதி சொன்ன
புதுமைப்பெண்
இன்றும் குடத்திலிட்ட
ஒளி விளக்குகளாக!
பசு தருவது பால்;
பசி ஆறுவது கழுநீரில்
இதுவன்றோ என்றும்
பெண்மை பெரும் பேரன்பு
காதல் செய்யும் பொது
சாகசங்கள் எத்தனை
கணவனான பிறகு
கண்டிப்புகள் எத்தனை
தாய்மை ஆன பிறகு
தியாகங்கள் எத்தனை
முதிர்ந்த விட்ட பிறகு
உதறிய உறவுகள் எத்தனை
பாசமின்றி பறித்து
வேசம் போட பயன்படும்
வாசமில்லாத வண்ண
காகித பூக்களே நாம்
மாதராக பிறக்க
மாதவம் வேண்டாம்
பெண்மையான இம்
மாபாவம் போதுமே
எதிரி என எவருமில்லை
நம்மில் நாமே எதிரி
வன்மைக்கு வசியமாகும்
உண்மை தான் பெண் எதிரி
வேண்டிய வரம் வேண்டுமென
விடுதலை வெள்ளி விடியுமென
ஆழ்கடல் அமைதியாக
விடிய,விடிய காத்திருக்கும்
நம் பாட்டை காண சகிக்காமல்
பாரதியும் பாடிவிட்டு சென்றார்
நிமிர்ந்த நடை பழகு
நேர் கொண்ட பார்வையோடு என
KRSHI!