Thursday, June 26, 2014

நேசம்!




பற்றில்லா பயனற்ற உறவு
நீரற்ற வெற்று நிலம் கண்டு
உயிரற்று உடலாவதை விட
காட்சி பிழை நோக்கி செல்லும்
அச்சில கணமேனும் கற்பனையில்
மென் கைப்பற்றி வையகம் அறிந்து
வான் உலகம் செல்வது மேல்!


         ஒரு கவிஞனுக்கு இயற்கையும்,கற்பனையும்,சந்தங்களும், உயிர்,உணர்வு,உடல் போல,காதல் என்பது ஒரு உணர்வு அதை கற்பனையில் வாழும் கவிஞன் ஒருவனே அற்புதமாக உணர முடியும்,சொல்ல முடியும், கவிஞனுக்கு ஞானம் மிக அதிகம், ஏகாந்த்தத்தை விரும்புபவர்கள், ஏகாந்த்ததை இடிக்கும் எந்த செயலையும் விரும்பாதவர்கள்,தொடராதவர்கள். எழுத்துக்களையே வாழ்க்கையாக நினைத்து எழுதும் சந்தங்களுடன் இசையை சேர்த்து தான் எழுதும் பாடல்களில் வரும் வடிவங்களையே காதலன்/காதலியாக நினைத்து வாழ்க்கையை ரசிப்பவர்.


         மெல்லிய உணர்வில் முதல் இடம் பிடிப்பது நேசம், அந்த முதல் இடத்தில் வடிவம் பெறுவதுதான் காதலன்/காதலி! எந்த கவிஞனின் கண்முன்னும் வருவது சிந்தனையில் எழும் சந்தங்கள்,சந்தங்களுடன் இசை சேர்ந்தால் பாடல்கள், அவன் எழுதிய சந்தங்களுடன் இசையை சேர்த்து பாடல்களாக பாடும் போது உலகமே தன் கைக்குள் வந்ததாக எண்ணுகிறான்,

        எல்லா இசைகளையும் அவன் இயற்கை அன்னையிடம் காண்கிறான், இசையில் அவன் கண் முன் முதலில் வருவது கானப்பறவை குயில், ஏகாந்தத்தில் எழும் அந்த இனிய கீதம் [அதனை ஈடு செய்யும் இசை எங்கும் இல்லை] கவிஞனை மட்டுமே அதிகமாக ஈற்கும் மெல்லிசை, நன்கு கூர்ந்து கவனித்தால் குயிலின் இசை மனிதனுக்கு எதையோ சொல்வது போலவே இருக்கும், அதை ரசனை உள்ள கவிஞன் மட்டுமே நேசிப்பான்,

          அந்த மெல்லிசை தரும் குயிலையே தன் காதலியாக கற்பனை சொப்பனத்தில் நேசித்தவர் மாகவி பாரதியார், அவர் எந்த அளவு இயற்கையை அணு அணுவாக ரசித்து தன் கற்பனையை விரித்து எழுதிய பல பாடல்கள் சொல்லும் இதுவும் காதலே என.

 [கண்ணம்மா என்பவர் கற்பனை காதலிதானே!]


KRSHI!

Sunday, June 15, 2014

உலகத்துடன் ஒற்றி போவதும், உண்மைகள் கசப்பதும் ஒன்று!




உணர்வுகளை தாக்கி
உறவுகளை தக்க வைக்கும்
உரமில்லாத "இக்கால" மரம்!

      இக்கால சில பெண்களுக்கு இயல்பாகிவிட்டது புதுமை பெண் என நினைத்து கொண்டு புதை குழியை நாடுவது, இன்றைய "சில" பெண்கள் மிகவும் "சுதந்திரமான" முற்போக்கு வாதிகள்.

         ஒரு பெண்ணை பார்க்க வேண்டும் என்றால் அவள் அம்மாவை பார்த்தால் போதும் என பலர் [வழி வழியாக அனைவரும் சொல்வதுதான்] சொல்லி நாம் கேட்டு இருக்கோம் அம்மாவின் வளர்ப்பில்தான் [ஆண் பிள்ளை /பெண் பிள்ளை இருவருமேதான்] எல்லாம் அடக்கம் என்பது அதன் பொருள் ஆனால் இப்போதெல்லாம் அப்படி சொன்னால் பெண்களும் உதைக்க வருவாங்க அம்மாக்களும் உதைக்க வருவாங்க, காரணம் வெளி உலக வளர்ப்பில்தான் பிள்ளைகள் வளருகின்றனர். பெண்கள் விடுதியில் போய் பாருங்கள் ஒரு வாரம் தேவை இல்லை ஒரு நாள் போதும் அவர்கள் தன் தாய் தந்தையின் பெயர்களை எப்படி போற்றி பாதுகாக்கிறார்கள் என்பது!!


       சுதந்திரம் என்பதை ,பெண்ணுரிமை என்பதை எப்படியும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி வாழ்க்கையை எங்கோ எடுத்து செல்கின்றனர், சில பெண்களுக்கு, 27 ,30 என வயதாகியும் மணமாகாததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம், என்னுடைய உண்மையான அனுபவத்தில் தான் இதை சொல்கிறேன் "சில" பெண்கள் என்பதை மனதில் கொள்ளவும்.

       அன்பு,பாசம்,விட்டு கொடுத்தல்,பக்தி...... இதெல்லாம் குறைந்து கொண்டுதான் போகிறது வளரவில்லை ஆதி காலத்தில் இருந்தே பெண்ணை அவதூறாக பேசுவது நாகரீகம் அல்ல என்பதாலும் சிலர் இதை எதிர்க்கலாம் ஆனால் உண்மை எப்போதும் கசக்கும்.

        பெண் பார்த்து மணம் முடிப்பது என்பது நம் கலச்சாரங்களில் என்றும் தொடரும் முக்கியமான மங்கள நிகழ்ச்சிகளில் ஒன்று, ஒரு வருடமாக பிள்ளைகளுக்கு பெண் தேடிய அனுபவத்தில் புரிந்து கொண்டது பல, இவை ஆச்சரியபடுத்திய விஷயங்கள் இல்லை, இருந்தாலும் இதை பகிர விரும்புகிறேன்.

           பெண் பார்க்க சென்ற இடத்தில் நான் கேட்பதற்கு முன்பே ஒரு பெண்ணின் முதல் பேச்சு " ஆன்ட்டி எனக்கு சமைக்க வராது, ...சரி, இதில் போய் என்னம்மா என் பசங்களுக்கு தெரியும் அவங்ககிட்டே கத்துக்கோ,இல்லை என்றால் வேலை செய்பவர்கள் இருக்காங்க, பெண்ணின் முகத்தில் திருப்தி, இக்கால பெண்களுக்கு சமைக்க வராது என்று சொல்வது "கேவலம் போர்த்திய பெருமை" ஆக எண்ணுகிறார்கள்.

        ஆன்ட்டி ஒரு சின்ன ரெக்வெஸ்ட் , ம் என்னம்மா? கல்யாணமான பின் நான் ஜாப் போக விரும்பல இதில் உங்களுக்கு ஏதும் ஆட்சேபணை இல்லையே,நான் என் பையனை பார்க்க அவன் ஹிந்தியில் கிசுகிசுத்தான் " அம்மா இவள் என்ன நம் வீட்டிற்கு மெகா சீரியல் பார்க்க வராளா என்ன?? கிளம்பும்மா...

             இன்னொரு பெண்ணின் ரெக்வெஸ்ட் ஆன்ட்டி எங்க வீட்டில் வீடு கட்டி கொண்டு இருக்காங்க அதை கட்டி முடிக்கும் வரை கல்யாணமான பின்னும் எங்க வீட்டிற்கு என் சம்பளத்தில் பாதி கொடுக்க வேண்டி இருக்கும், இவள் வாழப்போகும் வீட்டிற்கு பையன் லோன் கட்டுவான் இவள்???!!!.

              இன்னொரு பெண்ணின் ரெக்வெஸ்ட் என் தம்பி படிப்பு முடியும் வரை அவனுக்கு உதவியாக இருக்கணும், [அவனுக்கு 25 வயது ஆகிறது +2 கூட முடிக்கல] அவன் எப்போ படிப்பை முடிப்பது இவள் எப்போ பொறுப்பாக தன் வீட்டை கவனிப்பது???

                     இன்னொரு பெண் வீட்டில் அவள் அண்ணன் இருவருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது, [கல்யாண வயதில் சகோதரி இருக்கும் போதும்] அவள் ரெக்வெஸ்ட் எனக்கு என் அண்ணன்கள்தான் எல்லாம், என்னை படிக்க வைத்து பெரியவள் ஆக்கியது, அவர்களுக்கு நான் கண்டிப்பாக ஏதாவது செய்யணும்....

               எல்லா விஷயங்களிலும் சுயநலமாக யோசிக்கும் பெண்கள் தான் வாழப்போகும் ,தனக்கென உருவாக போகும் தன்னுடைய குடும்பத்தை பற்றி யோசிக்க முடிவதில்லை [புரியாத ஒன்று]

        இதை எதற்கு குறிப்பிட்டேன் என்றால் ஒரு பெண் என்பவள்தான் ஒரு தனி குடும்பத்தை உருவாக்கி நிறுவனம் செய்வது, வாழ்வின் அடிப்படையே ஆடும் போது, இப்படி "சில" பெண்களை நம்பி, சில குடும்பம் புயலில் அகபட்ட குடிசை போல இருக்கிறது. ஆனால் இதை பற்றி பேச எந்த சமுதாயமும் கொடி தூக்குவதில்லை காரணம் பெண்ணுரிமை என்ற பித்தளையின் ஒளி வீசல்,

              இதில் இன்னும் ஒரு கொடுமை மணமான 6 அல்லது 12 மாதத்திற்குள்ளாக பிரிதல், விவாகரத்து,ஜீவான்ம்சம் அது ,இது என.....

        சமிபத்தில் செய்தி தாளில் வந்த செய்தி கல்யாண மண்டபத்தில் இருந்து "மணப்பையன்" :) ... காணவில்லை, கல்யாணநாளின் முன் இரவே ஓட்டம், அவனை கண்டு பிடித்து விசாரித்ததில் அவன் கூறியது "நிச்சயம் ஆகி 4 மாதம் ஆகிறது அவளின் கண்டிஷன் மிக மிக அதிகம் என்னால் தாங்க முடியல அதான் எடுத்தேன் ஓட்டம்" என்றான்... காலங்கள் மாறும், காட்சிகள் மாறும், ........ மாறாது என்பதெல்லாம் பொய் ஆகிறது...


           அதே நேரத்தில் இந்த கால ஆண்பிள்ளைகளும் பொருளாதார ரீதியாகத்தான் வாழ்க்கையை பின்பற்றுகிறார்கள்,கடமைக்கு நேசிப்பதும் ,உடமைகளை பரிசளிப்பதும்தான் வாழ்க்கை என மாற்றி கொண்டார்கள்.
          அன்பு, பாசம் எல்லாமே பொழுதுபோக்காக மாறிவிட்டது என்பதை விட மாற்றி விட்டார்கள் என்பதே உண்மை.

பெண்:- சம்பாதிப்பு என்பது இருப்பதால் மற்றவரை சார்ந்து இருக்க வேண்டியதில்லை என்ற தவறான கண்ணொட்டம்

ஆண்:-ஒரு பெண்ணே தனியாக வாழ்க்கையை நடத்தும் போது நாம் ஏன் கூடாது என்கிற அசட்டுதனம்

பெற்றவர்கள் என்னதான் சொல்லி மூடி மறைத்தாலும், உண்மை என்பது இக்கால பெண்பிள்ளை /ஆண் பிள்ளைகளிடம் தோற்று போய் நிற்பதுதான்.

KRSHI!