Thursday, June 26, 2014

நேசம்!




பற்றில்லா பயனற்ற உறவு
நீரற்ற வெற்று நிலம் கண்டு
உயிரற்று உடலாவதை விட
காட்சி பிழை நோக்கி செல்லும்
அச்சில கணமேனும் கற்பனையில்
மென் கைப்பற்றி வையகம் அறிந்து
வான் உலகம் செல்வது மேல்!


         ஒரு கவிஞனுக்கு இயற்கையும்,கற்பனையும்,சந்தங்களும், உயிர்,உணர்வு,உடல் போல,காதல் என்பது ஒரு உணர்வு அதை கற்பனையில் வாழும் கவிஞன் ஒருவனே அற்புதமாக உணர முடியும்,சொல்ல முடியும், கவிஞனுக்கு ஞானம் மிக அதிகம், ஏகாந்த்தத்தை விரும்புபவர்கள், ஏகாந்த்ததை இடிக்கும் எந்த செயலையும் விரும்பாதவர்கள்,தொடராதவர்கள். எழுத்துக்களையே வாழ்க்கையாக நினைத்து எழுதும் சந்தங்களுடன் இசையை சேர்த்து தான் எழுதும் பாடல்களில் வரும் வடிவங்களையே காதலன்/காதலியாக நினைத்து வாழ்க்கையை ரசிப்பவர்.


         மெல்லிய உணர்வில் முதல் இடம் பிடிப்பது நேசம், அந்த முதல் இடத்தில் வடிவம் பெறுவதுதான் காதலன்/காதலி! எந்த கவிஞனின் கண்முன்னும் வருவது சிந்தனையில் எழும் சந்தங்கள்,சந்தங்களுடன் இசை சேர்ந்தால் பாடல்கள், அவன் எழுதிய சந்தங்களுடன் இசையை சேர்த்து பாடல்களாக பாடும் போது உலகமே தன் கைக்குள் வந்ததாக எண்ணுகிறான்,

        எல்லா இசைகளையும் அவன் இயற்கை அன்னையிடம் காண்கிறான், இசையில் அவன் கண் முன் முதலில் வருவது கானப்பறவை குயில், ஏகாந்தத்தில் எழும் அந்த இனிய கீதம் [அதனை ஈடு செய்யும் இசை எங்கும் இல்லை] கவிஞனை மட்டுமே அதிகமாக ஈற்கும் மெல்லிசை, நன்கு கூர்ந்து கவனித்தால் குயிலின் இசை மனிதனுக்கு எதையோ சொல்வது போலவே இருக்கும், அதை ரசனை உள்ள கவிஞன் மட்டுமே நேசிப்பான்,

          அந்த மெல்லிசை தரும் குயிலையே தன் காதலியாக கற்பனை சொப்பனத்தில் நேசித்தவர் மாகவி பாரதியார், அவர் எந்த அளவு இயற்கையை அணு அணுவாக ரசித்து தன் கற்பனையை விரித்து எழுதிய பல பாடல்கள் சொல்லும் இதுவும் காதலே என.

 [கண்ணம்மா என்பவர் கற்பனை காதலிதானே!]


KRSHI!

No comments:

Post a Comment