Thursday, August 13, 2009

"பிள்ளைகள்"

பணம் குவிக்கும் தொழிற்சாலை!

தற்காலம் பாட சாலை என்பது அறிவை பேருக்கும் பாட சாலையாக இல்லாமல் பணம் குவிக்கும் தொழிற்சாலை என்பது அனைவரும் அறிந்ததே! வளரும் [தளிர்கள்] குழந்தைகளுக்கு பல விஷயங்களை சொல்லி கொடுக்கும் நாம் நம்மை அறியாமல் லஞ்சம் வாங்குவதையும், கொடுப்பதையும் சொல்லி கொடுக்கிறோம்...முகஷ்துதி எப்படி செய்வது என்பதையும் கற்றுதருகிறோம்....

பள்ளிக்கூடம் எதுவா இருந்தாலும் , பிள்ளைகள் படிக்கும் விதம் தான் முக்கியம் ஒரு நாளைக்கு ஆறு முதல் ஏழு மணி நேரம் படிக்காத பிள்ளைகள் டியூஷன் என்கிற பேரில் ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திலா அறிவாளியாக மாறிடுவாங்க? யோசிக்க வேண்டிய விஷயம் அதே நேரம் சில பிள்ளைகள் டியூஷன் படிப்பது தாம் படிக்கும் அதே வகுப்பு ஆசிரியரிடம் அல்லது தான் படிக்கும் அதே பள்ளி ஆசிரியரிடம் படிக்க அடம் செய்வது ஏன்? பதில் [சில ] not [பல] எங்க வகுப்பு ஆசிரியரிடம் படித்தால் தான் நிறைய மதிப்பெண் கொடுப்பாங்க [ இங்கு குழந்தையிலேயே லஞ்சம் கொடுப்பது வளர்கிறது ] இதில் மறைமுகமாக பள்ளி நிர்வாகம் இடம் வகிக்கிறது .

சில பள்ளி நிர்வாகம் தன்னுடைய Annual Report காகத்தான் பாடுபடுகிறது.. அனால் குழந்தைகள் படிப்புக்காக அல்ல....சில பள்ளி ஆசிரியர்கள் தன் வகுப்பு பிள்ளைகளுக்கு Revision என்கிற பேரில் தேர்வு தாள்களில் வரும் கேள்விகளின் பதில்களை மட்டுமே சொல்லி கொடுக்கின்றன...[முக்கிய பங்கு டியூஷன் ஆசிரியர் ]பிள்ளைகளின் அறிவை ஒரு வட்டத்திற்குள் அடக்குகிறோம் ...


இப்போ இருக்கும் பிள்ளைகள் சிறந்த அறிவாளிகள்.. மனிதன் தன் மூளையை குறைந்த அளவே பயன்படுத்துவதாக மேதைகள் கூறி இருகிறார்கள் அனால் இப்போ உள்ள பிள்ளைகள் கொஞ்சம் அதிகமாகவே தன் மூளையை பயன்படுத்துறாங்க... அப்படி இருக்க நாமும் கொஞ்சம் பிள்ளைகளுக்கு உதவிய இருப்போமே...
தொடரும்...
KRSHI!




2 comments:

  1. Nichayamaga...AAnal Kudumbathil irrukkum kanavanum, manaiviyum velai seiya veliyae sellum podhu...tuition enbadhu oru extra thevai
    ikkalathil...irundhalum..ungal vadham sariyanadhe...

    ReplyDelete