Friday, June 25, 2010

சிரிப்பு!






சிரிப்பு என்பது உலகில் வாழும் அனைத்து உயிரினங்களில் மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த கடவுளின் வரம் அல்லது மனிதர்களின் சிறப்பம்சம் எனவும் தெரிந்ததே!மனிதன் விலங்குகளிடம் இருந்து தான், தான் வாழும் முறைகளை கற்று கொண்டான் ..அனால் சிரிப்பு இயற்கையாகவே அவனுக்கு மட்டுமே கிடைத்தது,அப்படியிருக்க!

சில [மிக சில] மனிதர்கள் சிரிப்பா? அது என்ன? என்று கேட்கும்படி நடந்து கொள்வது ஏன் புரியவில்லை! தற்சமய வாழ்க்கை முறையும் ஒரு காரணமாக இருக்கலாம் பலர் சிரிக்க நேரமில்லை என "Loughing Club " செல்கிறார்கள்..." நான் என்ன பைத்தியமா? தேவை இல்லாமல் சிரிக்க" என சொல்லும், பிற்காலத்தில் பைத்தியமாக போகும் பைத்தியமல்லாதவர்களை பற்றி நான் குறிப்பிடவில்லை ...

"வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் " என நம் முன்னோர்கள் கூறியது தவறு, என்று கூறுவது போல மகிழ்ச்சியான தருணங்களிலும் சிலர் மனதில் சிரிப்பு வந்தாலும் வெளிக்காட்டாமல் கடனே என புன்னகைப்பார்கள், ஏன்? புரிவதில்லை.. சிலர் அவசியமே இல்லாமல் "ஈஈ" என இளிப்பார்கள்..[கடவுளே இவர்களுக்கு ஏன் சிரிப்பை கொடுத்தாய் ? என்று என்ன தோணும்]

ஒரு மாதகுழந்தை ,இரண்டு மாதகுழந்தை பார்த்திருப்பீர்கள் ...அழும், சிரிக்கும்...அனால் சிரிக்கும் போது மட்டுமே அனைவரும் ஆனந்தமாக சொல்வார்கள் ஏன்? மகிழ்ச்சியில் கத்தவே செய்வார்கள் ஏதோ பார்க்காததை பார்த்தது போல! சிரிப்பு வாழ்வில் இன்றியமையாதது .

குழந்தையின் ஒரு சிரிப்புக்காக நாம் என்ன என்ன செய்கிறோம் சிரிப்பு ஒரு இன்றியமையாத இயற்கை,ஒரு இளம்பெண்ணின் சிறிய புன்னகைக்காக அவன் நண்பனோ? காதலனோ? என்னவெல்லாம் செய்ய தயாராக இருக்கிறார்கள்? [என்ன சிரிப்பு வருகிறதா?]

சிரிப்பு ஒரு பரிசு போன்றது! சிரிக்கும் போது நம் உடலில் 300 தசைகள் அசைகின்றன. தசைகள் புத்துணர்வு பெறுவதால் உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், கவலைகளும் போகின்றன!சிரித்தால் வயது குறையும் என சொல்ல காரணம் இதுவும் ஒன்று ,மேலும் ஆனந்தமாக கூறும் வார்த்தைகளில் இதுவும் ஒன்று " நல்ல சிரித்த முகம்."

"கொஞ்சம் சிரிங்களேன் ,சிரிக்க வைங்களேன்"

KRSHI!


Wednesday, June 23, 2010

"ஐயா" செம்மொழி பரிசு !




ஐயா ! என்கிற இந்த தமிழ் சொல் மிக மரியாதைக்குரிய சொல் அதை சரிவர பயன்படுத்தாமல் மழுங்கி ,மரியாதை கொடுக்க முடியாதவர் ,அல்லது மரியாதையை கொடுக்க தெரியாதவர் பயன்படுத்தும் செம்மொழியாக மாறிவிட்டது.

இப்படியாக யோவ் ,போயா ,வாயா என்று அழைப்பது! ‘டா’ ,’டி’ சொல்லை விட தரக்குறைவானது.இதில் இன்னும் பெரிய விஷயம் என்னவென்றால் இப்படி "ஐயா" என்பதை ‘போயா’, ’வாயா’ என்று மாற்றியவர்கள்,அல்லது அந்த சொல்லை பயன்படுத்துபவர்கள் அதிகம் அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள் என்பது குறிப்பிட தக்கது .

இந்த சொல்லை செம்மொழி ஆக்கிய தமிழர்களுக்கு இச்செம்மொழி மாநாட்டில் பரிசு என்ன ?

KRSHI!

Saturday, June 19, 2010

Santa ,Panta Sardars...


பஞ்சாப் என்றதும் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஐந்து
நதிகள் சர்தார் ,பசுமை ஆம் மிக மிக பசுமை வாய்ந்த பூமி!
பஞ்சாப் இல் விவசாயம் மிக அதிகம் சர்தார்கள் அதிக உழைப்பாளிகள் ...
பஞ்சாப் மண்வளம், மிகவும் வளம் , வலிமை & பசுமை .

சர்தார்களை ஏன் நாம் கேளிக்கை பொருளாகவே பார்க்கிறோம் சீக்கிய
மதம் நம் ஹிந்துக்களை காப்பதற்காகவே உருவானது [குரு நானக் ஜி ] சொல்லபோனால் நம் இந்தியாவில் அதிக மரியாதை தருபவர்களும் ,
அன்பாக இருப்பவர்களும் ,மிகுந்த உழைப்பாளிகளாக இருப்பவரும்
பஞ்சாப் மக்களே ..

தமிழுக்கு சமமாக, ஏன்! அதிகமாகவே வெளிநாடுகளில் சென்று
உழைத்து பஞ்சாப் போலவே பசுமையாக வாழ்பவர்கள் ....உலகில் உள்ள மதங்களில் எப்பொழுது வேண்டும் என்றாலும் மக்கள் மதம் மாறிக்கொள்ளலாம் ஆனால் சீக்கிய மதத்தில் மாறமுடியாது அதற்க்கு அவர்கள் உடன்படுவதில்லை.. பிறப்பில் வேறு மதத்தினராக இருந்தால் நாம் சீக்கியராக மாற முடியாது .

சீக்கிய மதத்தில் உள்ளவர்கள் ஹிந்து மதத்தில் மணம் முடிப்பார்கள் வேறு
மதத்திலும் மணம் முடிப்பார்கள் அனால் ஹிந்துவையோ வேறு மதத்தினரையோ சீக்கியராக மதத்தில் இணைப்பதில்லை மேலும் உண்மையான சீக்கியர்கள் ஐந்து பொருட்களை மிக புனிதமாக கருதுவார்கள் .. எல்லாமே "K" என்கிற எழுத்தில் ஆரம்பம் ஆகும் ....

1.Kada [கைகளில் அணியும் வளையம் ]
2.Kirpan [ இடையில் தொங்கும் கத்தி ]
3.Kesh [தலைமுடி ]
4.Kanga [சீப்பு ]
5.Kachcha [ கச்சை ]....
புனிதமாக கருதும் வண்ணத்தையும் இங்கு குறிப்பிடுகிறேன்
6.Keshar [ஆரஞ்சு வண்ணம் ]

நாம் கோவிலுக்கு செல்வதில் பல கட்டுப்பாடுகள் இருக்கிறது
விரதம் இருந்து செல்ல வேண்டும், இந்த நாழி போக கூடாது, அந்த நாழி போக கூடாது என...சீக்கிய மதத்தில் கோவிலை "குரு துவாரா "
என்று அழைப்பார்கள்.
கடவுளின் வாசல் ...குரு துவாரா செல்ல ஒரே ஒரு கட்டுபாடுதான் உண்டு அது தலையில் கண்டிப்பாக துணி கட்டி செல்வது.
எந்த சீக்கிய கோவிலுக்கு சென்றாலும் கண்டிப்பாக லங்கர் என சொல்லப்படும் அன்னதானம் இருக்கும் பணக்காரன் ,ஏழை என்கிற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒன்றாக செய்யப்படும் உணவு.. அதில் பெண்கள் ஆண்கள் என அனைவரும் சேவை செய்வார்கள்.
வேலைகாரகள்,சமையல்காரி என யாரும் குறிப்பிட்டு கிடையாது சேவையை
புண்ணியமாக கருதுவார்கள் சீக்கிய மதத்தில் சொல்லப்படுவது
முதலில் "Bagad" [ பக்தனின் சேவை ],பிறகுதான் "Sagad" [கடவுளுக்கு சேவை ]இன்னும் நிறைய சொல்லாம் அவர்கள் வாழும் முறை ஒரு சின்ன சின்ன விசயத்திற்கும் மகிழ்ச்சியாக ஒன்று கூடி ஆடி,பாடி மகிழ்வார்கள் .

நாம் அனைவரும் அறிந்தது ...அனைத்து மதத்தில் இருந்தும் கடவுள் போல வேடமிட்டு தொலைகாட்சி,சினிமா போன்றவற்றில் நடிப்பார்கள் சீக்கிய
மதத்தில் அப்படி செய்யவே கூடாது,செய்ய முடியாது அது மதத்தின் அவமானம் என கருதுவார்கள் ஏனெனில் ?கடவுள் போல மாறமுடியாது கடவுள்தான் உண்மை என்கிற பக்தி ...

நம்மில் பலர் அவர்களை [சீக்கியர்களை ] கேளிக்கையாக சித்தரிக்கிறோம் அவர்கள் அப்படி செய்வதும் இல்லை செய்பவர்களை குறை சொல்பவரும் இல்லை மாறாக அவர்களும் ரசிக்கிறார்கள். அதே மற்ற வட மாநிலங்களில் வாழும் மக்கள் !

தமிழர்கள் பேசும் ஹிந்தியை ,கலாச்சாரத்தை [ பூ வைப்பது ,மஞ்சள் பூசுவது] கண்டபடி கேளிக்கையாக சித்தரிப்பார்கள் [கோபம், கோபமாக வரும் பலமுறை தவறை உணர்த்தி இருக்கேன் [[வாய்பேசி].. இனியும் "Santa ,Panta " படித்து ரசிக்கும் போது அதே நேரம் நல்ல செய்திகளையும் யோசிக்கலாமே!


WAHE GURU JI KA KHALSA !
WAHE GURU JI KI FATHE!
KRSHI!