Friday, December 20, 2013

சட்டம் இருட்டறையா? இரட்டை அறையா?






விவாகரத்து பெற்ற கணவர் மனைவி இருவரில் ஜீவானாம்சம் என்று பயன் பெறுவது மனைவி மட்டுமே இது சட்ட பூர்வம், இது அந்த பெண் வருமானம் ஈட்ட இயலாத சூழ்நிலையில், [வேலைக்கு போகாத நிலை] கணவர் ஜீவானாம்சம் கொடுக்கலாம், சட்டமும் ஒழுங்கு எனலாம்,

அதே நிலை ஒரு கணவருக்கு வந்தால் அவரின் மனைவி ஏன் அந்த ஆணுக்கு ஜீவானாம்சம் கொடுப்பதில்லை? மேலும் விவாகரத்து பெற்ற பிறகு தன் கடமையில் இருந்து தவறிய பெண்ணுக்கு தன் கடமை தவறாது அவள் கணவர் அவளுக்கு ஜீவானாம்சம் கொடுக்க வேண்டும், இதில் இன்னும் ஒரு பாதிப்பு அவர் பரம்பரை சொத்தில் இருந்தும் அவர் மனைவிக்கு பங்கு உண்டு,

இந்த காலத்தில் பல இடங்களில் கணவரை விட அதிக வருமானம் பெரும் மனைவியர் இருக்கின்றனர் அவர்களுக்கு எதற்கு ஜீவானாம்சம்?? புரியாத சட்டமாக இருக்கு, எல்லா விதத்திலும் சம உரிமை தேவை எனும் "பெண்ணீயம்" இதற்கு எந்த கண்ணியமான பதிலும் சொல்லாமல் "TRACK" மாறி கொடி தூக்கும், இப்படி சில,பல அத்தியாவச விஷயங்களில் பெண்ணியத்தின் அணுகுமுறை பசுத்தோல் போர்த்திய கரடியாக உள்ளது.

தற்சமய வாழ்க்கை முறையில் பல இடங்களில் சாமார்த்தியமான சாகச பெண்கள் இதை மிக அழகாக பயன்படுத்தி திருமணம் செய்த 3,6 அல்லது ஒரு சில வருடதிற்குள் விவாகரத்து பெற, [பெற்று] ஏமாற்று வித்தை நடக்கிறது.

வரதட்சணை பற்றி வாய் ஓயாமல் கத்தி ஆர்பாட்டம் செய்யும் இந்த பெண்ணியம் இதை பற்றி ஒரு நாளாவது அலசியிருக்குமா??? பெண்ணியம் இதை அலசாவிட்டால் போகிறது சட்டமாவது இப்படி சில தவறான விஷயங்களுக்கு பச்சை கொடி காட்டாமல் ஆலோசிக்க வேண்டும்.

KRSHI!

Tuesday, November 19, 2013

திகட்டும் அல்வாக்கே திருட்டு அல்வா!


                        நம் நாட்டின் அரசியல் வாதிகளின் கட் அவுட் படம்,அவர்களின் வரவேற்புக்காக செய்யப்படும் செலவுகளை [இன்னும் பல] கணக்கில் கொள்ளாமல்,அத்தியாவச பயன்பொருள்களான சமையல் வாயு,பெட்ரோல்,விலை ஏற்றம்,வங்கி கடன்,வீட்டு கடனில் அதிகமான வட்டி,என நடுத்தர வர்க்க மக்களை வைத்து நாட்டின் சிக்கனத்தை நிர்ணயிப்பது நம் நாட்டில் மட்டுமே பிரசித்தி இன்னும் சில வருடம் போனால் நடுத்தர வர்க்க மக்கள் Grocery,Condiments பொருட்கள் எல்லாம் EMI யில் வாங்க வேண்டி இருக்கும்,

                       மக்களிடமே பணம் வாங்கி [வருமான வரி] மக்களுக்கே இலவச பொருட்கள் விநயோகிப்பது [அல்வக்கே அல்வா] நம் நாட்டில் மட்டுமே இது பிரசித்தி, வழி கடை தேங்காயை பிள்ளையாருக்கு உடைத்து புண்ணியம் பெறுவது போலநம் நாட்டின் கடனை நடுத்தர வர்க்கம்தான் சரி செய்ய வேண்டுமா? நம் நாட்டை "மிக சிறப்பாக வழி" நடத்தும் அரசியல்வாதிகள் சிக்கனமாக இருக்க கூடாதா?

                       அந்த கால அரசர்கள் போல மாறு வேடத்தில் இரவொ,பகலோ ஊர்வலம் வந்து நாட்டை கண்காணித்து மக்கள் குறை தீர்க்க வேண்டிய அளவு மக்களை பற்றிய தகவல்கள் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை, மக்களை தொடர்பு கொள்ள பல வழிகள் தற்காலத்தில் இருக்கு அப்படி இருந்தும் ஒன்றுமே தெரியாதது போல நம் அரசியல்வாதிகள் நடப்பது, கண்கள் இருந்தும் கறுப்பு திரையிட்டு நாடகமாடும் நடிப்பு குருடர்கள் போல,

KRSHI!


Saturday, November 16, 2013

பயபக்தி!


ஸ்ரீராமாயணம் என்பது பாசம்,பக்தி,வீரம்,தியாகம் என்பதை அதிகம் வலியுறுத்துவதாகவும், மனிதர்கள் இப்படிதான் வாழ வேண்டும் என்பதை அறிவுறுத்துவதாகவும் உள்ளது,

ஸ்ரீமஹாபாரதம் என்பது ஊழ்வினை,பகை,பழி,வன்மம்,குரோதம்,நிறைந்ததாகவும்,மனிதர்கள் இப்படியெல்லாம் வாழக்கூடாது என அறிவுறுத்துவதாக உள்ளது,

நம் முன்னோர்கள் கடவுளிடம் மிகுந்த பயபக்தியுடன், பண்பாடுடன் அவர்களை பின்பற்றி,தன் பிறப்பை படைத்தவனின் காணிக்கை என்று வாழ்ந்தவர்கள், நாம் டேய் சாமி கண்ணை குத்திடும் என்ற  "பயமும்" கொஞ்சம் பக்தியுடனும் அவர்களை பின்பற்றி வாழ்க்கையை கொஞ்சம் வழுக்கியும் ,பிடித்தும் வாழ்பவர்கள்

தற்கால பிள்ளைகள்  மிகவும் யதார்த்தமாகவே வாழ பழகி கொண்டவர்கள்,இந்த இரண்டு இதிகாசங்களையும் மிக அறிதாக கூட பின்பற்றுவார்களா என்பது கேள்வியாகவே அமைந்துவிட்டது.

KRSHI!

Friday, November 8, 2013

பாசமலர்கள்!

\
அண்ணா பையா வாடா
கண்ணா மூச்சி ஆட
சும்மா சும்மா நீ
அழும்பல் பண்ணாதேடா!

செல்ல தங்கை வாடி
செங்கமலமே வாடீ
அங்கும் இங்கும் ஓடீ
என்னை அல்லல் படுத்தாதேடீ!

உலகில் சமய விழாக்கள் பல கொண்டாடப்படுகின்றன, ஒவ்வொரு விழாக்களுக்கும் காரணங்கள் பல சொல்லபடுகிறது, மனிதர்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப, அவர்களின் பயன்பாடாகவும், அறிவியல் தொடர்புள்ளதாகவுமே கொண்டாடப்படுகிறது.

சமய விழாக்களில் ரக் ஷா பந்தன், பாய் தூஜ் [Bhai Dooj] என்பது சகோதர,சகோதரி உறவை அடிப்படையில் கொண்டாடப்படும் விழாக்கள், இவை வட இந்தியாவில் மிக விமரிசையாக கொண்டாடப்படும் சமய விழாக்களில் ஒன்று,

 ரக் ஷா பந்தன், இவ்விழாவின் முக்கிய நிகழ்வு, பெண்கள் தன் சகோதரர்,சகோதரர்களாக கருதும் ஆணின் மணிகட்டில் பலவண்ண நிறங்களில் பூ வேலைபாடுகள் செய்யபட்ட கயிறு கட்டுவது, இதை ராக்கி என்பார்கள், அந்த சகோதரியின் வாழ்வில் என்றும் பாதுகாப்பாக இருந்து அவள் வாழ்க்கை நலத்திற்கு உறுதுணையாக இருப்பேன் என உறுதி கூறுவதாக கருதபடுகிறது,

பாய் தூஜ் என்பதும் சகோதரர் ,சகோதரி உறவின் அடைப்படை வைத்தே கொண்டாடபடும் விழாவில் ஒன்று, இதுவும் அதிகமாக வடமாநிலங்களில் கொண்டாடபடும் விழா,இதில் சகோதரிகள் தன் சகோதர்ரகளின் நீண்ட ஆயுள்,வாழ்க்கை நலத்திற்காக வேண்டி கொண்டு அவனுக்கு வெற்றி திலகமிட்டு கொண்டாடும் நிகழ்வு, இது தீபாவளியின் மறுநாள் கொண்டாடும் விழா,இதை நம் தமிழர்களும் பின்பற்றலாம்
[சிலர் பின்பற்றுவதாக சொல்கிறார்கள்]

இன்றும் சில இடங்களில் வேண்டா வெறுப்பாக சகோதரர், சகோதரி உறவுகள் இருக்கின்றன, பிறந்த பொண்ணுங்க அழுதா வீட்டிற்கு ஆகாது என்ற முன்னோர் சொல்லுக்கு பயந்து செய்பவர்கள் பலர், சில வருடங்களுக்கு முன்பு பிறந்த பொண்ணுக்கு பச்சை சேலை எடுத்து கொடுத்தால் அவளின் சகோதரர் வாழ்க்கை வளம் பெறும் நலமுடன் இருப்பான் என்ற புரளிக்கு பயந்து கவனித்த சகோதரர் பாசம் அனைவரும் அறிந்தது,

[சாமி,ராசி,பரிகாரம் என்பது மட்டும் நம் முன்னோர்கள் சொல்லாமல் போய் இருந்தால் உலகம் இன்னும் அதிக விரைவில் உருண்டு ஓடி விட்டு இருக்கும்]

பாசம் என்பது சீர் சினத்தி சரிவர செய்வது மட்டுமல்ல,அதை நான் இங்கு குறிப்பிடவும் இல்லை ஆண் ,பெண் என்ற பாகுபாடு இல்லாமல் நண்பரகளாகவும் பழகும் ஒரே உறவு சகோதரர்,சகோதரி உறவு மட்டுமே,,இதை பலர் சரியாக பேணி காப்பதில்லை,

எத்தனை வீடுகளில் பணபற்றாகுறையை தவிர்த்து தன் சுக ,துக்கக்கங்களை மட்டும் பகிர்ந்து கொள்ள சகோதரர், சகோதரிகள் பழகுகிறார்கள்,???????

பெற்றோர்களிடம் பேசமுடியாத பல விஷயங்கள் சகோதரர், சகோதரியிடம் விவாதிக்கலாம் ஆனால் இந்த உறவு பல இடங்களில் வளமையாக இல்லை, தன் பிறந்த வீட்டிற்கு செல்லும் சில பெண்கள் முக்கை சிந்துவதற்கே செல்கிறார்கள்,சகோதரர்கள் பேசுவதற்கே காலம் இல்லை என்பது போல நடந்து கொள்வார், சில பெண்கள் வாய் திறக்கும் முன்பே அவளின் சகோதரரின் மனைவி அழ ஆரம்பித்து விடுவாள்

தற்கால உறவு முறை மிகவும் சுருங்கி விட்டது, ஒரு வீட்டில் ஒரு சகோதரர்,ஒரு சகோதரி மட்டுமே சில இடங்களில் அதுவும் இல்லை,சகோதரர்,சகோதரி உறவு மிகவும் உன்னதமானது,அதை இப்படி சில விழாக்களை கொண்டாடுவதன் மூலம் மிக சிறிய அளவிலாவது இந்த உறவை பத்திரபடுத்தலாமே

தாய் ,தந்தை என நாம் வளரும் உறவில் அனுதினம் பார்த்து,உணர்ந்து, வளர்ந்த உறவு சகோதரர்,சகோதரி உறவே அன்பு,பாசமெனும் பாலம் கட்டி இதையும் நாம் காப்போமே!

KRSHI!

Wednesday, October 9, 2013

திறமைசாலிகள் பெண்களா? ஆண்களா?



ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும்
ஒரு பெண் இருக்கிறாள்!!!!!
என சொல்லும் சமூகம்
ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னாலும்
ஒரு ஆண் இருக்கிறான்!
என ஏன் சொல்வதில்லை?????


ஒரு ஆணின் வளர்ச்சிக்கு பின் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்ல கேட்டு இருக்கோம்! ஒரு பெண்ணின் வளர்ச்சிக்கு பின் ஒரு ஆண் இருப்பான் என்று சொல்ல கேட்பது மிக அறிது [எந்த ஒரு தருணத்திலும் ஒரு ஆண் தன்னை ஒரு பெண்ணுக்கு அடுத்தபடியாக  வைத்து பார்க்க விருப்பம் கிடையாது என்பது அனைவரும் அறிந்தது] தன்னை ஒரு பெண்ணுக்கு நிகராக வைத்து பார்ப்பது என்பதே முடியாது எனும் போது, இதில் ஒரு ஆண் பெண்ணுக்கு பின் என்பது ஊமையானது,

அதே நேரத்தில் பல பெண்கள் வெற்றிக்கு பின்னும் ஆண்கள் இருக்காங்க ஆனா அப்படி சொன்னால் உடனே சமுதாயத்தின் தவறான கணிப்பே [ பார்வை ] பெரியதாக பேசப்படுகிறது, பெண்களை பற்றி, அவர்களின் கற்பை வைத்தே நிறைய கதைகள் பின்ன பட்டு இருக்கு, இன்னும் பின்ன படுகிறது இது உலகமே அழிந்தாலும் மாறாத இயற்கை போல், கலாசாரம் கெடக்கூடாது என்பதில் கவனமா இருக்கும் சமுதாயம் பெண் இனம் பல விஷயங்களில் இழிவு படுத்த படுகிறதே அது ஏன் என்பதில் மட்டும் ஏன் அதிகம் கவனமா இருப்பதில்லை??

ஒரு குடும்பத்தின் கணவனுக்கு அவன் மனைவி மந்திரியாக நடந்துகொண்டால் அந்த குடும்பம் பல்கலைகழகமாகும், அரசியானால் அந்த குடும்பம் அடிமையாகும் [நாசமாகும்] என பெரியவர்கள் சொல்ல கேட்டு இருக்கோம். மந்திரியாக இருந்தால் நல்லவை,கெட்டவை,என்பதில் கவனமும் ,எதையும்  வரும் முன் காப்போம் என்கிற எண்ணமும் வரும், அரசியாக இருந்தால் தான் என்கிற கர்வம் மேலோங்கி, கடமையை விட கட்டளைகளையே பிறப்பித்து வெற்றி தோல்வி என்பதில் மட்டுமே கவனமும் கண்ணோட்டமும் இருக்கும்

இன்றும் பல வீடுகளில் வேலைக்கு செல்லும் பெண்கள் மாத கடைசியில் கையெப்பம் இட்டதும் தன்மாத வருமானம் அவர்கள் கைகளில் வராமல் [வராமல் என்ன கண்களில் கூட காணாமல்] கணவன் கையில் அல்லது அவன் வீட்டாரின் கைகளில் செல்கிறது, இது பெண்ணுக்கு மட்டும் அல்ல சில ஆணுக்கும் நடக்கிறது இதை விட பல மடங்கு வீடுகளில் ஆண்களின் அடிமை நிலையும் இதேதான், சில வீடுகளில் தன் ATM கார்ட் முதல் கொண்டு அனைத்தும் மனைவியிடம் கொடுத்து விட்டு தின கூலியாகவும் இருக்காங்க, ஆண்களில் இதை யாரும் பெரிய தவறாக எண்ணுவதில்லை, ஆனால் இதே பெண்கள் விஷயம் என்றால்  சமுதாயம் அதை ஒரு பெரிய விஷயமாக்கி அந்த வீட்டில் உள்ளவர்கள் முதல் கொண்டு உலகத்தையே தன்னை பார்க்கும்படி பெண்கள் சுதந்திரம் பற்றி பேசி அந்த குடும்பத்தையே ஒன்றும் இல்லாமல் செய்து விடுகிறது

ஆண் பெண் சமம் என கூவும் இவர்கள் இதையும் சமமாக எண்ணி தவறு,சரி என்பதை ஆராய்ந்து செயல்படவேண்டும் ஒரு குடும்பத்தில் உள்ளவர்களின் பலத்திலும் பலவீனத்திலும் இந்த சமுதாயம் முக்கிய பங்கு வகிக்கிறது, ஆண் என்றாலும் பெண் என்றாலும் ஒரு மனிதனை  அழிக்க அதே மனித இனம் பயன்படுத்தும் முதல் ஆயுதம் அவனின் கற்பை இழிவு படுத்தும் பேச்சும் ,செயல்களும்தான்

இங்கே ஒன்று சொல்ல விரும்புகிறேன்:-

இந்த தரணியின் தாய் என நாம் வணங்கும் தெய்வம் மாதா பார்வதி தேவி அவரின் பல ரூபங்களின் ஒன்று மா காளிதேவி உலகில் அதர்மங்கள் அதிகமான போது அவர் இந்த அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன, இன்னொரு புராணமும் சொல்லபடுகிறது தன் செல்ல மகனின்  தலையை ஆதிபகவன் சிவபெருமானே துண்டித்ததால் கோபகனல் பொங்க காளி ரூபம் எடுத்தார் என்று

நாம் மா காளி தேவியை கருப்பு சேலை உடுத்தி கைகளில் பலவித ஆயுதங்கள் ஏந்தி எதையும் அழிக்க கூடிய கோப சொரூபமாகத்தான் பார்க்கிறோம் உண்மையில் அவரின் அந்த ரூபம் கோபம் தணிந்து நின்ற ஒரு நிலைதான்,மா காளி தேவியின் பாதத்தின் அருகில் தரணியின் தந்தை என வணங்கப்படும் அந்த சிவ பெருமானே படுத்து இருப்பார், மா காளியின் கோபத்தை தணிக்க வில்லை என்றால் உலகின் ஜீவராசிகள் அனைத்தும் அழிக்கபட்டுவிடும் என்கிற ஐயத்தில் தேவர்களும்,முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டதில் மா காளியின் சினத்தை சிதைக்க சிவபெருமானே அவர் வரும் வழியில் குறுக்கே படுத்ததாக சொல்லபடுகிறது சினம் பொங்க தன்னை மறந்து அனைவரையும் மிதித்து, வீழ்த்தி அழித்து வரும் பாதையில் தன்னையும் அறியாமல் தன் பாதத்தில் இடறியது தன் கணவன் என அறிந்து “பதறி ”ஹையோ” இது என்ன உலகின் பரம் பொருளே,என் ஈசனே தாங்கள் மேல் என் காலடியா? என அதிர்ச்சியில் நாக்கை கடித்து கொண்டு அதே ரூபத்தில்  தன் சினம் தணிந்து நின்றதாக கதை சொல்லபடுகிறது. 

இங்கு குறிப்பிடுவது உலகையே அழிக்க வல்ல அந்த மா காளி தேவியே தன் கணவன் மேல் தன்னையறியாமல் தன் பாதம் பட்டதை பெரிய குற்றமாக,பாவித்து பதறி தன் தவறை உணர்ந்து சினம் தணிந்து நின்றார் என்றால் நாம் அனைவரும் அவர்கள் படைத்த அற்ப மனிதபிறவிகள், கணவனின் முக்கியத்துவமும் அவனின் சுயசிந்தனையும் இதில் சொல்லபடுகிறது மேலும் பிறப்பில் ஆணும் பெண்ணும் சமம் என உணர்த்தவே என்னில் நீ பாதி என்று அர்த்தநாரியாக காட்சி அளிப்பவர்கள் சிவனும் பார்வதியும்.இங்கே இதையும் நகைச்சுவையாக பாவித்து ஒரு பெண்ணின் காலடியில் வீழ்ந்தால்தான் அவள் சினம் தணிகிறாள் என்று எண்ணும் அல்லது சொல்லும் மனிதர்களை எதும் சொல்ல இயலாது,

என்னதான் கதை ,புராணம் படித்தாலும், கேட்டாலும் நாம் அற்ப மனித பிறவிகள் என பல விஷயங்களில் நிருபிக்கிறோம். ஒரு பெண் கணவனிடம் அடி வாங்கினால் அதை கண் மூக்கு வைத்து எவ்வளவு கொடுமையாக சொல்ல முடியுமோ அவ்வளவு கொடுமையாக சித்தரிக்கிறோமோ அதே ஒரு ஆண் மகன் அடி படும் போது மனதாலும் சரி, உடலாலும் அதை ஒரு நகைச்சுவையாக சொல்கிறோம், ரசிக்கிறோம்.  [இது உண்மை என இதை படிப்பவர் பலருக்கு தெரியும்] இதை ஆண்களே சித்தரிக்கின்றனர் காரணம் எந்த ஒரு ஆணும் தன்னை பலவீனமாக எவர் முன்னிலையிலும் நினைக்க கூட விரும்பவில்லை என அனைவரும் அறிந்ததே!

பெண்ணை விட ஒரு ஆணின் அழுகைக்கும்,வேதனைக்கும் வலி மிக அதிகம்,பொருமை,அமைதி,அன்பு,பாசம் விட்டுகொடுத்தல் என்கிற பல விஷயங்களில் ஆண்கள்தான் முதலிடம் பெறுகிறார்கள், இங்கு பெண்களை தாழ்வாக சொல்லவில்லை பெண்ணை விட ஆண் பல விஷயங்களில் மேன்மை பெற்றவர்கள் என்பது பலரின் கருத்து

முதலில் சொன்ன கருத்தின்படி , எந்த ஒரு பெண்ணின் முன்னேற்றமும் அவரகளின் திறமையை பற்றி அல்லாமால் அவர்களின் கற்பை வைத்தே நிறைய கதைகள் பின்ன பட்டு இருக்கு, இன்னும் பின்ன படுகிறது இது உலகமே அழிந்தாலும் மாறாத இயற்கையாகவே தொடர்கிறது,பெண்ணின் பிறவி ஆணை விட உடலால் பலம் அற்றவளாக இருந்தாலும் மனதாலும்,அறிவாலும் மிக அதிக பலம் உள்ளவளாகவே நிருபிக்கிறாள்
ஆனால் இதை எந்த ஒரு ஆண்மகனும் ஏற்று கொள்வதில்லை "பெண் புத்தி பின் புத்தி" என காலம் காலமாக சொல்லபட்டு வருகிறதே!

["பின்" என்பது [pin] "ஊசி" போல மிக கூர்மையாக இருக்கும் என சொன்னால் பெண்ணை பிடிக்க முடியுமா? குத்தி விடுவாளே என்ற முன் எச்சரிக்கையாக இருக்குமோ???]

மேலும் சொர்ணக்கா என்று சொன்னாலே அனைவருக்கும் ஒரு பயம் கலந்த பதற்றம் இது சினிமாவில் மட்டும் அல்ல, ஒரு ஒரு வீட்டிலும் ஒரு சொர்ணக்கா இருக்கத்தான் செய்கிறார்கள் மாமியாராக,நாத்தினாராக,அண்ணியாக,வெளியே சொர்ணமாக உள்ளே சொர்ணக்காவாக, பிணம் தின்னும் கழுகுகள் போல பணம் தின்னும் அழுகுணிகள்,இந்த கட்டுரையை படிப்பவர்களின்  எண்ணங்களில் மாற்றம் இருக்கலாம்,இல்லாமலும் போகலாம் ஆனால் உண்மை என்ன என்பது படிக்கும் மனதுக்கு தெரியுமே!! மனது தானே நீதிபதி,

உலகில் கருணை என்பதை பிடித்து கொண்டு காரியம் சாதிக்கும் பெண்கள் எத்தனை?? அதே நேரம் சகலகலாவல்லவன் போல நடித்து பொய் பேசி காரியம் சாதிக்கும் ஆண்கள் எத்தனை???ஆண்கள் பெண்கள் இருவருமே சமமாக தவறுகள் தெரிந்தும் தெரியாமலும் செய்யறாங்க இது சமுதாயத்திற்கு மிக நன்றாக தெரிந்தும் அதில் லாபம் என தெரிந்தால் போற்றுவதும் நஷ்டம் என தெரிந்தால் தூற்றுவதும் தான் நடக்கிறது, நாம் மனிதர்கள் இது போன்ற விஷயங்களை ஒரு பொழுது போக்கிற்காக பயன்படுத்தி வாழ்கிறோம்,வாழ்க்கையில் அதை உணர்ந்து உணர்த்துவதற்காக அல்ல உண்மைதானே?!

யாராவது பெண்ணாக இருந்து பெண்ணுக்கு எதிராக எழுதிவிட்டால் ஏன் இப்படி எழுதுகிறாய் என முரட்டு காளைகள் போல சில பெண்கள் நல சங்கம் ஓடீ வரும், காரணம்..உழைப்பே இல்லாமல் நம் பெயர் தலைப்பு செய்திகளில் வரும் என்ற பசியில், அதே ஆண்களை பற்றி யாராவது தவறாக எழுதினால் எந்த ஆண்கள் நல சங்கம் ஓடீ வருகிறது? மலையை பார்த்து DOGS குலைக்கிறது என போய் கொண்டே இருப்பார்கள் இதான் ஆண்களின் தன்னம்பிக்கை.

ஒரு பெண் எப்படி இருக்கணும் என நாம் புதியதாக படிக்க போவதில்லை,புரியபோவதில்லை இது தெரியாமல் இருக்க நாம் இந்த Generation உம் இல்லை, ஒரு மனைவி என்பவள் இப்படி இருக்க வேண்டும் என்ற சில வரை முறை சொல்லபட்டு இருக்கு அதன்படி பலர் இருக்காங்க அதில் யார் இருக்காங்க என இதை படிப்பவர்கள் தங்கள் மனதை தொட்டு சொல்லுங்க பார்ப்போம்!!!

 கணவன் என்னமோ கையில் பணம் ,காசு கொட்டும் அமுதசுரபி வைத்திருப்பது போல  பல வீடுகளில் அவன் காசு கொண்டுவந்தால் நல்ல கவனிப்பு இல்லை என்றால் உஹும் கணவனுக்கு ஃப்ரிஜ் ல இருக்கும் உணவை வழங்கி விட்டு அம்மா வீட்டிற்கு பயணம் அவன் சம்பளத்தை செலவு செய்ய

திருவள்ளுவரின் மனைவி போல ஒரே குரலுக்கு ஒடோடி வரவேணாம்,கண்ணகி போல தனக்கு துரோகம் செய்தும் மன்னித்து கணவனுக்காக ஒரு நாட்டையே எரிக்க வேணாம்,இன்னும் பல சொல்லலாம்..

கடமை கணவனுக்கு மட்டும் அல்ல மனைவிக்கும் சமமானது,  இதில் ஆண் பெண் என்ன?? நியாயம் அநியாயம் என்பது மனிதர்களுக்கு சமமானதே, உலகில் ஆண்களும் சமமாக பாதிக்கபடுபவர்கள் என்பது உண்மை,பெண்கள் மட்டும் இரக்கபடுபவர்களுள் அடக்கமில்லை என்பது மிக பெரிய உண்மை.

எந்த ஆண் தன் சம்பளம் வந்ததும் தனக்காக நகை வாங்கவோ, துணி வாங்கவோ ஓடுகிறான் ஒரு ஆண் சம்பாதிப்பில் அவன் தன் வீட்டில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வான் அதே ஒரு பெண் சம்பாதிப்பில் அவள் தன் வீட்டை கவனித்தாலும், அவளின் முழு முதல் கவனம் புதியதாக என்ன சேலை டிசைன், புதியதாக என்ன நகை டிசைன் வாங்கலாம் எனதான் எண்ணும் இங்கு திறமைசாலிகள் ஆண்களா பெண்களா??? 

அதே நேரத்தில் ஆண்களில் பலர் ஒரு பெண்ணை நம்பி தன் வீட்டில் உள்ளவரை துரத்துவதில்லை, வீட்டை துறந்து வருவதும் இல்லை, அவர்களை யாருக்காகவும் விட்டு கொடுப்பதும் இல்லை ஆனால் சில பெண்கள் சில ஆண்களை நம்பி முற்றிலும் வீடு வாசல் துறந்து வந்து நம்பி நாளடைவில் யாருமற்ற ஆனாதையாக தனித்து நிற்கின்றனர் இங்கு திறமைசாலிகள் பெண்களா? ஆண்களா?

KRSHI!