ஸ்ரீராமாயணம் என்பது பாசம்,பக்தி,வீரம்,தியாகம் என்பதை அதிகம் வலியுறுத்துவதாகவும், மனிதர்கள் இப்படிதான் வாழ வேண்டும் என்பதை அறிவுறுத்துவதாகவும் உள்ளது,
ஸ்ரீமஹாபாரதம் என்பது ஊழ்வினை,பகை,பழி,வன்மம்,குரோதம்,நிறைந்ததாகவும்,மனிதர்கள் இப்படியெல்லாம் வாழக்கூடாது என அறிவுறுத்துவதாக உள்ளது,
நம் முன்னோர்கள் கடவுளிடம் மிகுந்த பயபக்தியுடன், பண்பாடுடன் அவர்களை பின்பற்றி,தன் பிறப்பை படைத்தவனின் காணிக்கை என்று வாழ்ந்தவர்கள், நாம் டேய் சாமி கண்ணை குத்திடும் என்ற "பயமும்" கொஞ்சம் பக்தியுடனும் அவர்களை பின்பற்றி வாழ்க்கையை கொஞ்சம் வழுக்கியும் ,பிடித்தும் வாழ்பவர்கள்
தற்கால பிள்ளைகள் மிகவும் யதார்த்தமாகவே வாழ பழகி கொண்டவர்கள்,இந்த இரண்டு இதிகாசங்களையும் மிக அறிதாக கூட பின்பற்றுவார்களா என்பது கேள்வியாகவே அமைந்துவிட்டது.
KRSHI!
No comments:
Post a Comment