\
அண்ணா பையா வாடா
கண்ணா மூச்சி ஆட
சும்மா சும்மா நீ
அழும்பல் பண்ணாதேடா!
செல்ல தங்கை வாடி
செங்கமலமே வாடீ
அங்கும் இங்கும் ஓடீ
என்னை
அல்லல் படுத்தாதேடீ!
உலகில் சமய விழாக்கள் பல கொண்டாடப்படுகின்றன, ஒவ்வொரு விழாக்களுக்கும் காரணங்கள் பல சொல்லபடுகிறது, மனிதர்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப, அவர்களின் பயன்பாடாகவும், அறிவியல் தொடர்புள்ளதாகவுமே கொண்டாடப்படுகிறது.
சமய விழாக்களில் ரக் ஷா பந்தன், பாய் தூஜ் [Bhai Dooj] என்பது சகோதர,சகோதரி உறவை அடிப்படையில் கொண்டாடப்படும் விழாக்கள், இவை வட இந்தியாவில் மிக விமரிசையாக கொண்டாடப்படும் சமய விழாக்களில் ஒன்று,
ரக் ஷா பந்தன், இவ்விழாவின் முக்கிய நிகழ்வு, பெண்கள் தன் சகோதரர்,சகோதரர்களாக கருதும் ஆணின் மணிகட்டில் பலவண்ண நிறங்களில் பூ வேலைபாடுகள் செய்யபட்ட கயிறு கட்டுவது, இதை ராக்கி என்பார்கள், அந்த சகோதரியின் வாழ்வில் என்றும் பாதுகாப்பாக இருந்து அவள் வாழ்க்கை நலத்திற்கு உறுதுணையாக இருப்பேன் என உறுதி கூறுவதாக கருதபடுகிறது,
பாய் தூஜ் என்பதும் சகோதரர் ,சகோதரி உறவின் அடைப்படை வைத்தே கொண்டாடபடும் விழாவில் ஒன்று, இதுவும் அதிகமாக வடமாநிலங்களில் கொண்டாடபடும் விழா,இதில் சகோதரிகள் தன் சகோதர்ரகளின் நீண்ட ஆயுள்,வாழ்க்கை நலத்திற்காக வேண்டி கொண்டு அவனுக்கு வெற்றி திலகமிட்டு கொண்டாடும் நிகழ்வு, இது தீபாவளியின் மறுநாள் கொண்டாடும் விழா,இதை நம் தமிழர்களும் பின்பற்றலாம்
[சிலர் பின்பற்றுவதாக சொல்கிறார்கள்]
இன்றும் சில இடங்களில் வேண்டா வெறுப்பாக சகோதரர், சகோதரி உறவுகள் இருக்கின்றன, பிறந்த பொண்ணுங்க அழுதா வீட்டிற்கு ஆகாது என்ற முன்னோர் சொல்லுக்கு பயந்து செய்பவர்கள் பலர்,
சில வருடங்களுக்கு முன்பு பிறந்த பொண்ணுக்கு பச்சை சேலை எடுத்து கொடுத்தால் அவளின் சகோதரர் வாழ்க்கை வளம் பெறும் நலமுடன் இருப்பான் என்ற புரளிக்கு பயந்து கவனித்த சகோதரர் பாசம் அனைவரும் அறிந்தது,
[சாமி,ராசி,பரிகாரம் என்பது மட்டும் நம் முன்னோர்கள் சொல்லாமல் போய் இருந்தால் உலகம் இன்னும் அதிக விரைவில் உருண்டு ஓடி விட்டு இருக்கும்]
பாசம் என்பது சீர் சினத்தி சரிவர செய்வது மட்டுமல்ல,அதை நான் இங்கு குறிப்பிடவும் இல்லை
ஆண் ,பெண் என்ற பாகுபாடு இல்லாமல் நண்பரகளாகவும் பழகும் ஒரே உறவு சகோதரர்,சகோதரி உறவு மட்டுமே,,இதை பலர் சரியாக பேணி காப்பதில்லை,
எத்தனை வீடுகளில் பணபற்றாகுறையை தவிர்த்து தன் சுக ,துக்கக்கங்களை மட்டும் பகிர்ந்து கொள்ள சகோதரர், சகோதரிகள் பழகுகிறார்கள்,???????
பெற்றோர்களிடம் பேசமுடியாத பல விஷயங்கள் சகோதரர், சகோதரியிடம் விவாதிக்கலாம் ஆனால் இந்த உறவு பல இடங்களில் வளமையாக இல்லை,
தன் பிறந்த வீட்டிற்கு செல்லும் சில பெண்கள் முக்கை சிந்துவதற்கே செல்கிறார்கள்,சகோதரர்கள் பேசுவதற்கே காலம் இல்லை என்பது போல நடந்து கொள்வார், சில பெண்கள் வாய் திறக்கும் முன்பே அவளின் சகோதரரின் மனைவி அழ ஆரம்பித்து விடுவாள்
தற்கால உறவு முறை மிகவும் சுருங்கி விட்டது, ஒரு வீட்டில் ஒரு சகோதரர்,ஒரு சகோதரி மட்டுமே சில இடங்களில் அதுவும் இல்லை,சகோதரர்,சகோதரி உறவு மிகவும் உன்னதமானது,அதை இப்படி சில விழாக்களை கொண்டாடுவதன் மூலம் மிக சிறிய அளவிலாவது இந்த உறவை பத்திரபடுத்தலாமே
தாய் ,தந்தை என நாம் வளரும் உறவில் அனுதினம் பார்த்து,உணர்ந்து, வளர்ந்த உறவு சகோதரர்,சகோதரி உறவே அன்பு,பாசமெனும் பாலம் கட்டி இதையும் நாம் காப்போமே!
KRSHI!