Thursday, June 2, 2011

"கலைமகள் சரஸ்வதி பற்றி!"



அறிவை கொடுப்பவளும் அறிவை வளர்ப்பவளுமாகிய
கலைமகள் என போற்ற படும் சரஸ்வதிக்கு நிறைய பெயர்கள் உண்டு பக்தேவி, பிராஜ், சாரதா, பிரம்மி, சத்ருப, மகாஸ்வேதா, சர்பசுகிய, ப்ரிதுதர், பகிஸ்வரி,கலைவாணி....

நாம் [தென் இந்தியாவில்] சரஸ்வதி பூஜை நவராத்ரி பண்டிகையின் நவமி அன்று கொண்டாடுவோம் வட இந்தியாவில் சரஸ்வதி பூஜை மாசி மாதம் பஞ்சமிதிதி [Jan-Feb அமாவாசைக்கு அடுத்து வரும் பஞ்சமி திதி] அன்று கொண்டாடுவார்கள் வட இந்தியர் சரஸ்வதியை துர்கையின் மகள் என நம்புகின்றனர் [மகாலக்ஷ்மியையும்].

இந்து கடவுள்களில் அவதாரம் எடுக்காத ஒரே கடவுள் சரஸ்வதி என்பது குறிப்பிதக்கது ஆழ்கடலில் அமுதம் கடையும் போது கடலில் இருந்து அமுத கலசத்துடன் மகாலட்சுமி வெளிப்பட்ட போது அசுரகளை அமுத கலசத்தில் இருந்து திசை திருப்ப சரஸ்வதி வெளிபட்டார் என்கிற கதையும் உண்டு, நாம் மஹவிஷ்ணுதான் மோகினி யாக வந்து திசை திருப்பியதாக சொல்கிறோம்
மேலும் சரஸ்வதி என்பவர் ஒரு நதி எனவும் நாம் அறிந்தது.

ஒரு முறை சரஸ்வதி நதி கரையில் ஆரியர்களும் ஆரியர் அல்லாதவரும் [நிஷேத்,சபர்,புளிந்தர்] போர் புரிந்த போது,விஷ்ணு பகவான் கேட்டு கொண்டதன் பேரில் சரஸ்வதி நதி மறைந்து விட்டதாக ஒரு வரலாறு, [நீர் இல்லையேல் போர் எங்கனம் என] மேலும் விஷ்ணுவின் மனைவிகள்தான் கங்கா,சரஸ்வதி,லக்ஷ்மி [ரொம்ப ஓவர் இல்ல] எனவும் கதை.

கலைமகள் ஊமையான காளிதாஸை பெரிய புலவராக மாற்றியவர் என்பதும் நமக்கு தெரியும் அதே நேரம் காளிதாஸ் சரஸ்வதியை புகழ்ந்து பாடுகையில் ஒருமுறை சரஸ்வதின் அழகை தவறாக பாடியதால் சரஸ்வதி கோபம் கொண்டதால் காளிதாஸ் குற்ற உணர்வால் மீண்டும் ஊமையானர் என்பதாகவும் கதை..

KRSHI!

Wednesday, June 1, 2011

"திருமகள் மகாலக்ஷ்மியை பற்றி!"


அனைவரும் அறிந்தது தீபாவளி இந்தியாவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை ஒவ்வொரு வருடமும் தீபாவளி விஜயதசமி யில் இருந்து சரியாக 20 நாளில் வரும். நவராத்திரி என கொண்டாடப்படும் அதே நாட்களில் தானே ராம் ராவணனுடன் போர் நடந்ததாக கதைகள் [அதர்மத்திற்கு எதிராக தர்மத்தின் வெற்றி] வட இந்தியாவில் பல மாநிலங்களில் விஜயதசமி கொண்டாடுவார்கள் UP,MP,DELHI,HARYANA etc....

விஜயதசமியின் 10 ஆம் நாள் ராவணனின் உருவ பொம்மையை எரிப்பார்கள் ஸ்ரீராம் வேடமிட்ட ஒருவர் அம்பு ஏய்து முன்பே தயார் நிலையில் இருக்கும் எரிபொருள் அடங்கிய ராவணனின்உருவத்தை எரிப்பார். அன்றில் இருந்து 20 ஆம் நாள் தீபாவளி அதாவது ராவணனை வென்று சீதையை மீண்டும் அயோத்திக்கு அழைத்து வரும் நாள்தான் தீபாவளி மஹாலட்சுமி வருகைதரும் நாள். [சீதை= மகாலட்சுமி]

நாம் இங்கு கொண்டாடும் தீபாவளியை [Chotti Deebavali என்று சொல்வார்கள் அமாவாசைக்கு முன் தினம்] தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு தன்த்ராஸ்என சொல்வார்கள் [Dhanthras ] அன்று இங்கு நாம் சொல்லும் அக்ஷய திருதியை போல புதிய பொருட்கள் அல்லது தங்கம், வெள்ளி என வாங்குவார்கள் முக்கியமாக ஸ்டீல் பாத்திரம் கண்டிப்பாக வாங்குவாங்க அதில் தான் தீபாவளி அன்று மகாலட்சுமிக்கு பிரசாதம் படைப்பார்கள் வீட்டை சுற்றிலும் விளக்குகள் ஏற்றி மாலையில் தான் பூஜை செய்வார்கள் மகாலட்சுமி தன் வாசல் வருவாங்க என்ற பலத்த நம்பிக்கை ராவணனை ஸ்ரீராம் வென்றது ஸ்ரீலங்காவில் [தென் இந்தியா] இங்கிருந்து வட இந்தியா [அயோத்தியா] செல்ல ஒரு குறிப்பிட்ட மணி நேரம் ஆகி இருக்கும் அதுதான் நாம் முதலிலே தீபாவளி கொண்டாடி விடுகிறோமா?

மேலும் தீபங்கள் வீட்டை சுற்றிலும் ஏற்றப்படுவதற்கு இன்னொரு கதையும் உண்டு, நம் முன்னோர்கள் மகாளய அமாவசை அன்று நம்மை சந்திக்க வருவார்கள் என்ற கதை உண்டு இல்லையா? மகாளய அமாவசை அன்று வந்தவர்கள் தீபாவளியின் போது வரும் அமாவசைக்குதான் மீண்டும் மேலோகம் செல்வார்களாம் [நான் சொல்லலப்பா] அப்படி நம் முன்னோர்கள் மேலோகம் செல்ல அவர்களுக்கு ஒளி வெள்ளமாக அந்த தீபங்கள் ஏற்றபடுகின்றன எனவும் சொல்வார்கள்...
KRSHI!

"காளி அம்மனை பற்றி!"



சர்வ மங்கள மாங்கல்யே!
சிவே சர்வாத சாதிக்கே!
சரண்யே திரையம்பிகே கெளரி!
நாரயணி நமோஷ்துதே!!!

பயத்தை போக்கி அச்சம் தவிர்க்கும் காளி அம்மன் இவர் ஈசனின் [காளனின்] மனைவியான ஆதிபராசக்தி, இந்தியாவில் காளி அம்மனை அதிகம் வணங்குவது மேற்கு வங்காளத்தில்தான். கருமை நிறம், இரத்தகரையுடன் சிவந்து வெளியே தள்ளி இருக்கும் நாக்கு என அச்சம் ஊட்டும் உருவம், உண்மையில் அவர் தன் நாவை வெளியே தள்ளி காட்சி தருவது கோபத்தினாலோ நம்மை அச்சுறுத்தவோ அல்ல உலகில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்ட அம்மன் எடுத்த அவதாரம் தான் காளி மாதா!

சண்டு,முண்டு,சும்பு,னிசும்பு,ரக்தபீஜ் ஆகிய அசுரர்களை அழித்து கோபம் தீராமல் ஆக்ரோஷமாக தன் எதிரில் வருபவர்களை எல்லாம் காலால் மிதித்து அழித்து கொண்டே வருகிறார் அவரின் கோபத்தை தணிக்க சிவபெருமான் அவர் வரும் வழியில் குறுக்காக விழுகிறார் அதை கவனிக்காமல் அம்மன் சிவனையும் காலால் மிதித்து அழிக்க பார்க்கையில் ”ஹையோ” இது என்ன அந்த பரம் பொருளே,என் ஈசனே என் காலடியில் என அதிர்ச்சியில் நாக்கை கடித்து கொண்டு அதே ரூபத்தில் கோபம் தணிந்து நிற்பதுதான் காளியின் உருவம்....

[ஹ்ம்ம் இப்போ எல்லாம் தெரிந்து கால் பட்டாலும் தெரியாமல் கால் பட்டாலும் திரும்பி அப்படியே ஒரு பார்வை பார்த்துட்டு போவதுதான், திரும்பி பார்க்கிறார்களே அதே அதிகம்... என்ன முழிக்கறிங்க நானும் தான் இதில் உள்ளடக்கம் ]
KRSHI!

"துர்க்கை அம்மனை பற்றி!"


"ரக்ஷ ரக்ஷ ஜெகன் மாதா
சர்வ சக்தி ஜெய துர்கா!"

ராகு காலத்தில் பூஜை செய்தால் நினைத்தது நிறைவேறும் கஷ்டங்கள் சோர்வடைந்து காணாமல் போகும் என்பது உண்மை நவகிரங்களின் ஒரு கிரகமான ராகு தேவன் மனிதர்களை சோதனை கொடுப்பாராம் துர்க்கை அம்மன் ராகுவின் பலம் முழுக்க தன்னுள் வாங்கி /எடுத்து கொண்டவராம் அதனால் அம்மனை மீறி ராகு தேவன் மனிதர்களுக்கு சங்கடங்கள் கொடுப்பதில்லை என்பதால் அந்த ராகு காலத்தில் நாம் அம்மனை வணங்கினால் அம்மனின் அருள் கிடைப்பதோடு ராகு தேவனின் சங்கடங்கள் நம்மை பாதிப்பதில்லை என்பது நம்பிக்கை

துர்கா பூஜை என மேற்கு வங்காளத்தில் 10 ௦ நாட்கள் மிக விசேஷமாக நடைபெறும் பண்டிகை நவ துர்கைகள் ஷைலபுத்ரி, பிர்மாசாரிணி,சந்திர காந்த,குஷ்மந்த, ஸ்கந்த மாதா, காத்யாயினி, காலராத்ரி, மகாகௌரி, சித்திதாத்ரி, என்பது 10 ஆம் நாள் விஜயதசமி அன்று [விஜய் = வெற்றி தசமி =10 ஆம் நாள்] வெற்றியை கொண்டாடி காளி பூஜை செய்து பண்டிகை முடியும்.

தீபாவளிக்கு முன்வரும் அஷ்டமி திதியில் தன் பிள்ளைகளுக்காக விரதம் மேற்கொள்வார்கள் சிலர் வருடம் முழுதும் கூட அஷ்டமி திதி விரதம் இருப்பவரும் உண்டு நவமி என்பது மகாலக்ஷ்மிக்காக அஷ்டமி என்பது மஹாகெளரிக்காக, நவமி என்பது மஹாசரஸ்வதிக்காக என்று சொல்வார்கள் நாமும் நவராத்ரியில் நவமி அன்றுதானே சரஸ்வதி பூஜை செய்கிறோம்.
KRSHI!

"அழகு வேலனை பற்றி!"



அழகா வேல் அழகா
வேல் பிடிக்கும் கரம் அழகா
உன் விழி அழகா
உன் முகம் அழகா
கண் வியப்புடன் நோக்கும் திருமுருகா
என பாடி துவங்குகிறேன்!

தமிழ்க்கடவுள் முருகன் அழகும் அன்பும் வீரமும் விவேகமும் இன்னும் பல
அவரின் அருளை சொல்லி அவரை பற்றி பாடல்கள் உள்ளன இனியும் தொடரும் முருகருக்கு 600 க்கும் மேற்பட்ட திருபெயர்கள் உண்டு
அழகின் பிரபஞ்சம் பார்வதிக்கும் வீரத்தின் பிரபஞ்சம் சிவனுக்கும் பிறந்த புதல்வர் அல்லவா,

வட இந்தியாவில் முருகபெருமானை கார்த்திக் என மட்டுமே அறிவார்கள், சிவன் பார்வதியின் பெரிய புதல்வர் என கூறுவார்கள் நாம் இளையவர் என்போம் அங்கு முருகருக்கு கோவில்கள் அதிகம் இல்லை என்றே சொல்லாம் வட இந்தியர் அதிகம் முருகபெருமானை வணங்குவதில்லை செவ்வாய் கிழமைகளில் பவன் புத்திரர் அனுமான் கடவுளுக்குதான் விரதம் மேற்க்கொள்வார்கள்

முருகனை பலர் வட இந்தியாவில் பிரமச்சாரி எனக்கூட கூறுவர்
அவரை போர்க்கு உரிய கடவுளாகத்தான் எண்ணுகிறார்கள் இந்திரரின் படைக்கு சேனாபதி என மேலும் 'முருகா' என்றால் இந்தியில் சேவல் என பொருள் சேவல் கொடியோன் என்பதாலா?
KRSHI!

"சந்தோஷி மாதாஜி பற்றி!”



கணபதியை சிலர் பிரம்மச்சார கடவுள் எனவும் சிலர் மணம் முடித்தவர் எனவும் சொல்வாங்க வட இந்தியாவில் அவரை மணம்முடித்த கடவுளாகதான் சொல்கிறார்கள் கணபதின் மகள் தான் இந்த சந்தோஷி மாதாஜி எனும் அம்மன் கணபதிக்கும் அவரின் மனைவியான ரித்திக்கும் பிறந்தவர்தான் இந்த சந்தோஷி மாதாஜி.

வட இந்தியாவில் உள்ள பெண்கள் அதிகம் வெள்ளிகிழமையில் விரதம் இருந்து வணங்குவது இந்த அம்மனை [இப்போதும் கொஞ்சம் கொஞ்சமாக தென் இந்தியாவிலும்] 16 வாரங்கள் விரதம் இருந்து 16 வது வெள்ளிகிழமை அன்று அம்மனுக்கு பூஜைகள் செய்து, 8 ஆண்,1 பெண் [boys & girl not men & women] சிறிய குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து பூரி,அல்வா[கேசரி] பிரசாதம் அளித்து விரதத்தை முடிப்பார்கள் இந்த 16 வெள்ளிகிழமைகளிலும் புளிப்பு கலந்த உணவை உண்ணக்கூடாது என்பது இந்த விரதத்தின் முக்கிய கட்டுப்பாடு, அதே நேரம் விரதம் இருப்பவர் 16 வாரங்களும் சந்தோஷி மாதாஜி யின் கதையை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்பதும் ஒரு வேண்டுகோள்! 16 வெள்ளிகிழமையும் அம்மனுக்கு வெல்லமும் கடலையும் பிரசாதாமாக படைப்பார்கள்

[உண்ணுவது என்னமோ நாம் தான் hahaha] இந்த அம்மனை வணங்குபவர்கள் வீட்டிலும் வாழ்க்கையிலும் சந்தோசம் பெருகும் கவலைகள் அண்டாது என்பதும் மிக மிக உண்மை!

KRSHI!

"முழுமுதற்கடவுள் கணபதியை பற்றி!"




முழுமையாகவும் முதன்மையாகவும் போற்றப்படுபவர் கணபதி அவரை பற்றி பல கதைகள் அறிவோம் சில கதைகள் எத்தனை முறை படித்தாலும் மனதை ஈர்க்கும் அதில் கடவுளை பற்றி எனும் போதும் சொல்லவும் வேண்டுமோ? கணபதியை நாம் மஞ்சளில் அல்லது சாணத்தில் அல்லது ஈரமண்ணில் பிடித்து வைத்து எந்த பூஜையையும் ஆரம்பிப்போம் இல்லையா?

நம் மனதை ஒருமுக படுத்தி எந்த செயல் செய்தாலும் வெற்றி பெரும் என்பதும் இதன் நம்பிக்கையாகும் சக்தி இல்லையேல் சிவன் இல்லை சிவன் இல்லையேல் சக்தி இல்லை பார்வதி தன்னுடலில் இருந்து வழித்து எடுக்கப்பட்ட வியர்வை மஞ்சள் தூசுகளை சேர்த்து ஒரு கைப்பிடி பிடித்து தனக்கு காவலாக வைத்து நீராட சென்றாள் தன் தாய்க்கு வாயிற்க்காவலாக கணபதி நின்ற போது ஆதிசிவன் வந்தும் கணபதி சிவனை உள்வாசல் விடவில்லை யாவரும் அறிந்தது,

சக்தி என்பவள் சிவனுக்கு சமமான பலம் பெற்றவள் அவள் உடலில் இருந்து எடுக்கப்பட்ட வியர்வை+மஞ்சளில் உருவாகியவர் கணபதி அதிக பலம் பெற்றவர் அவரால் மேலோகத்திற்க்கு பாதிப்புகள் வரும் என பயந்து தேவர்களும் அசுரர்களும் சிவனிடம் முறை இட்டு பிறகு போர் நடந்து கணபதி தலை துண்டிக்கப்பட்டு யானை முகத்தினை பெற்றார் என்பதாகா ஒரு கதை!!!

KRSHI!